நிதிஷ் குமாரை கார்னர் செய்யும் பாஜக? பீகார் தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! வெளியான முக்கிய தகவல்
பாட்னா: பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு என்டிஏ கூட்டணியில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2020 தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் கிட்டத்தட்ட சம அளவிலேயே இரு கட்சிகளும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் இப்போது நிதிஷ் குமார் முதல்வராக இருக்கிறார். அங்கு பாஜக- ஜேடியு கட்சியின் கூட்டணி ஆட்சி ஆட்சியில் இருக்கிறது. ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சியாக இருக்கிறது. அங்கு இரு கட்டங்களாக நவம்பர் 6, 11 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ல் நடைபெறுகிறது.

என்டிஏ கூட்டணி
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே என்டிஏ கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் ஜேடியு கட்சியும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. நிதிஷுக்கு குறைந்த தொகுதிகளைக் கொடுத்து பாஜக கார்னர் செய்யலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில், பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறது.
எந்த கட்சிக்கு எவ்வளவு சீட்?
அங்கு மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், 205 தொகுதிகளை இரு கட்சிகளும் பிரித்துக் கொள்ளவுள்ளன. கடந்த 2020 தேர்தலில் கூட இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சம அளவிலேயே தேர்தலில் போட்டியிட்டன. 2020ல் ஜேடியு 115 தொகுதிகளிலும், பாஜக 110 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த முறையும் அதுபோலவே போட்டியிட என்டிஏ கூட்டணி முடிவு செய்திருக்கிறதாம்.
மீதமுள்ள 38 தொகுதிகள் சிறிய கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி கட்சி , இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படும். லோக் ஜனசக்தி கட்சிக்கு 25 தொகுதிகள், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவுக்கு 7 தொகுதிகள், ராஷ்டிரிய லோக் சமதா கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லையாம்.
சிறிய கட்சிகள்
கூட்டணியில் மூன்று சிறிய கட்சிகள் உள்ள நிலையில், அதில் சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்திக்கே அதிகத் தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாம். இதனால் மற்ற இரு கட்சிகளுக்கும் கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையக்கூடும். இதனால் அந்தக் கட்சிகளுக்கு ராஜ்யசபா அல்லது சட்ட மேலவை இடங்களை வழங்கி சமாதானப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் தேர்தல்
தேர்தல் ஆணையம் நேற்று பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை அறிவித்தது. இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும். நவம்பர் 14 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
முதல் கட்டத்தில் பீகார் மாநிலத்தின் மத்திய பகுதியில் உள்ள 121 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கும். இரண்டாம் கட்டத்தில் எல்லைப் பகுதிகளில் உள்ள 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். சுமார் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் உட்பட 7.4 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
அரசியல் களம்
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு மற்றும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கத் தீவிரமாக முயல்கிறது. அதேநேரம் மறுபுறம் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் மகாபந்தன் கூட்டணி அமைத்துக் களமிறங்குகிறது. எதிர்க்கட்சிகளின் தொகுதிப் பங்கீடும் சீக்கிரமே முடியும் எனத் தெரிகிறது.. இது தவிர ஆம் ஆத்மி கட்சி அனைத்து 243 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
பீகார் மாநிலத்தில் சுமார் 33% வாக்காளர்கள் Extremely Backward Class மக்களாக உள்ளனர். இவர்கள் எப்போதும் பாஜக கூட்டணிக்கே கடந்த காலங்களில் வாக்களித்துள்ளனர். இருப்பினும், நிதிஷ் அரசு மீதான அதிருப்தி, தேஜ்ஸ்வி யாதவின் பிரச்சாரம் காரணமாக அவர்கள் மெல்ல எதிர்க்கட்சிகள் பக்கம் செல்வது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications