பீகாரில் மாவோயிஸ்டுகள் வைத்த கன்னி வெடிகுண்டு வெடித்து 7 போலீசார் பலி
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கன்னிவெடிகுண்டு வெடித்ததில் 7 போலீசார் பலியாகினர்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ளது தன்ட்வா. போலீஸ் ஜீப்பில் 7 போலீசார் தன்ட்வாவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வழியில் புதைத்து வைத்திருந்த கன்னி வெடியை மாவோயிஸ்டுகள் வெடிக்கச் செய்தனர்.
இதில் ஜீப்பில் இருந்த போலீஸ் அதிகாரி உள்பட 7 போலீசாரும் உடல் சிதறி பலியாகினர். மாவோயிஸ்டுகள் பீகாரில் அவ்வப்போது போலீசார் மீது கன்னிவெடி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வெடிகுண்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications