பீகார் சட்டசபை தேர்தல் மோடி அரசுக்கு 'அக்னி பரீட்சை'.. அமெரிக்க அரசியல் வல்லுநர்கள்...
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலானது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு அக்னி பரீட்சையாக இருக்கும் என்று அமெரிக்கா அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்காவின் "Carnegie Endowment for International Peace"-ன் வல்லுநர்களான மிலன் வைஷ்ணவ், சாக்ஷம் கோஷலா ஆகியோர் எழுதிய தலையங்கத்தின் முக்கிய அம்சங்கள்:

- பீகார் சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் என்ன முடிவெடுத்தாலும் அது மாநில எல்லைகளைத் தாண்டி எதிரொலிக்கவே செய்யும்.
- இத் தேர்தலானது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு மிகப் பெரிய அக்னி பரீட்சை போன்ற சவாலாகும்.
- பீகாரில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் நாடாளுமன்ற ராஜ்யசபாவில் அக்கட்சி பெரும்பான்மையை நோக்கி செல்வதற்கு உந்துதலாக அமையும்.
- பீகார் மாநிலத்துக்கு ரூ1.25 லட்சம் கோடி நிதி உதவி அளிப்போம் என்று கூட வாக்குறுதி அளித்திருந்தது மத்திய அரசு. ஆகையால் தேர்தலில் தோல்வி அடைந்தால் அது மத்திய பா.ஜ.க. அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும்.
- தேர்தல் முடிவுகளைப் பொறுத்து நிதிஷ்குமார்லாலு பிரசாத் யாதவின் கூட்டணி தொடருமா? முறியுமா என்பது தெரியவரும்.
- 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நிதிஷ்குமாரின் செல்வாக்கு சரிந்துள்ளதாக தோற்றம் உள்ளது.. அதேபோல் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போதைய தேர்தல் முடிவுகள் இருவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
- காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது காங்கிரஸ். இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி தோல்வியைப் பொறுத்து ராகுல் காந்தியின் தலைமைக்கான உடனடி தேவை குறித்த விவாதங்கள் எழலாம்.
இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
More From
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications