பீகார் சட்டசபையில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
பாட்னா: பீகார் சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. சபாநாயகருக்கு எதிராக 125 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 112 வாக்குகளும் பதிவாகியது
பீகாரில் இன்று அந்த மாநில சட்டசபையில் அந்த மாநில சபாநாயகரான, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக தற்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும், இது நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாகவும் இருந்தது.

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை கடந்த மாதம் 28ஆம் தேதி காலையில் ராஜினாமா செய்தார். உடனேயே பாஜவுடன் புதிய கூட்டணி அமைத்து, மாலையிலேயே 9வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார். அவருடன் 2 துணை முதல்வர்கள் உட்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
புதிய ஆட்சி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நிகழ்வாக அமைச்சரவை விஸ்தரிப்பு மற்றும் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த சபாநாயகர் அவத் பிகாரி சவுத்ரியை நீக்கும் நடவடிக்கையை நிதிஷ், பாஜக கூட்டணி தொடங்கியது. முந்தைய ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் சபாநாயகராக பதவிவகித்து வந்த அவத் பிஹாரி, பா.ஜ.க. - ஜனதா தளம் கூட்டணி அமைத்த பிறகு தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய தயக்கம் காட்டினார்.
இதற்காக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை பாஜக வழங்கியது. இந்த நிலையில், இன்று அந்த மாநில ஆளுங்கட்சி சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
சபாநாயகருக்கு எதிராக 125 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 112 வாக்குகளும் பதிவாகியது. இதனால், நிதிஷ்குமார் அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அவத் பிஹாரி சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ள நிலையில் இப்பதவியை பாஜகவுக்கு தர நிதிஷ் சம்மதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications