For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களின் உயர் சிகிச்சைக்கு 1 லட்சம் ரூபாய்- பீகார் அரசு!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் அரசானது தன்னுடைய புதிய அறிவிப்பில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

இத்தொகையானது அப்பெண்கள் உயர்தர சிகிச்சை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அவ்வரசு தெரிவித்துள்ளது.

பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், இத்தொகையானது முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இதுவரை வழங்கப்பட்ட ரூபாய் 20 ஆயிரத்தை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட ரூபாய் 20 ஆயிரத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

English summary
Bihar government on Tuesday extended a helping hand to women falling victim of acid attack by making a provision for medical assistance up to Rs 1 lakh from the Chief Minister's fund. This was decided at a meeting of the state cabinet chaired by Chief Minister Jitan Ram Manjhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X