வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000.. தேர்தல் நெருக்கத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு
பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்த உதவி, முதலமைச்சர் நிச்சயம் சுய உதவிப் படிகள் திட்டம் கீழ் வழங்கப்படும். இது பட்டதாரிகள் வேலை தேடும் வரை, அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என பீகார் அரசு தெரிவித்திருக்கிறது.
முன்னதாக, இத்திட்டம் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது, 20 முதல் 25 வயதுக்குட்பட்ட கலை, அறிவியல் மற்றும் வணிக பட்டதாரிகளும் இதற்குத் தகுதி பெறுவார்கள். அவர்கள் வேலை இல்லாமல், சுய தொழில் செய்யாமல், அல்லது மேல்படிப்பில் சேராமல் இருந்தால் மட்டுமே இந்தப் பலனைப் பெற முடியும்.

இந்த அறிவிப்பு, பீகாரில் குறிப்பாக படித்த இளைஞர்களிடையே உள்ள வேலையின்மை பிரச்சனையை தீர்க்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. நிதீஷ் குமார் கூறுகையில், 2005 இல் தனது அரசு பதவியேற்றது முதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் 10 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நாங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளோம் என கூறியுள்ளார்.
"இந்த நிதியுதவி இளைஞர்களுக்குப் பயிற்சி பெறவும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும் உதவும் என்று நம்புகிறேன். இதன் மூலம் அவர்கள் வலுவான எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பார்கள்," என்று நிதிஷ்குமார் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் திட்டம் பீகார் அரசின் "7 உறுதிமொழிகள்" திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது இளைஞர்களுக்கு அதிகாரத்தை வழங்குதல் மற்றும் இளைஞர் நலன் துறையின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டது. தகுதியான விண்ணப்பதாரர்கள் http://7nishchay-yuvaupmission.bihar.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகளுக்கான விண்ணப்ப செயல்முறை இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், அரசு விரைவில் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி பீகார் முழுவதும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிரந்தர வேலைவாய்ப்பைப் பெற அவர்கள் முயற்சிக்கும் இந்த காலகட்டத்தில் இது ஒரு தற்காலிக நிவாரணத்தை வழங்கும். இருப்பினும், தேர்தலுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியானதை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி, இதை ஒரு அரசியல் நகர்வு என்று விமர்சித்துள்ளன.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications