பீகாரில் 14 வயது சிறுமி 6 பேரால் பலாத்காரம் செய்து ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் 14 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் லகிசாராய் மாவட்டத்தில் உள்ள லகோசக் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு இயற்கை உபாதை கழிக்க வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

Bihar govt. forms SIT to probe minor gang-rape

அப்போது அவரை 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு குற்றவாளிகளில் ஒருவன் அந்த சிறுமியை பன்சிபூர் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உள்ளூர் ரயிலில் ஏறச் செய்துள்ளான்.

பின்னர் ஓடும் ரயிலில் இருந்து அந்த சிறுமியை கீழே தள்ளியுள்ளான். தண்டவாளம் அருகே காயங்களுடன் கிடந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மைனர் சிறுவனை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைத்துள்ளது பீகார் அரசு.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bihar government has set up a Special Investigation Team (SIT) to probe the gang-rape of a 14-year-old girl.
Please Wait while comments are loading...