பீகார் நிதியமைச்சரின் 11 வயது பேரன் கடத்தல்... போலீசார் தீவிர விசாரணை

Subscribe to Oneindia Tamil

Bihar minister’s grandson kidnapped
பாட்னா: பீகார் நிதி அமைச்சர் பிஜேந்திர பிரசாத் யாதவின் பேரன் கடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநில நிதியமைச்சர் பிஜேந்திர பிரசாத் யாதவ். இவரது 11 வயது பேரன் மணீஷ். கோடை விடுமுறை முடிந்து சுபால் மாவட்டத்தில் உள்ள பிப்ரா பிளாக் ஏரியாவில் உள்ள பள்ளி விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த மணிஷை கடந்த ஒன்றாம் தேதி முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

உடனடியாக இது தொடர்பாக கபால் போலீசில் புகார் அளிக்கப் பட்டது. வழக்கைப் பதிவு செய்த போலீசார், ‘மணிஷை யார் கடத்தியிருப்பார்கள், எதற்காக கடத்தினார்கள்' என போலீசார் விசாரித்தி வருகின்றனர்.

இது குறித்து சுபால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதிர் குமார் போரிகா கூறுகையில், ‘பிஜேந்திர பிரசாத் யாதவின் பேரன் 11வயது மணீஷ், சுபால் மாவட்டம் பார்சா பகுதியில் உள்ள கான்வென்ட் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அவர் கோடை விடுமுறை முடிந்து வீட்டில் இருந்து பள்ளி விடுதிக்கு கடந்த 1ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக தெரிவித்தார். மணீஷை மீட்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்றாம் தேதி காணாமல் போன சிறுவன் குறித்து நேற்று தான் பீகார் போலீசார் அதிகாரப்பூர்வமாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+