காரை ஓவர்டேக் செய்ததற்காக 19 வயது மாணவரை சுட்டுக் கொன்ற பீகார் எம்.எல்.சி.யின் மகன் கைது
கயா: பீகாரில் தனது காரை முந்திச் சென்றதற்காக 19 வயது மாணவனை சுட்டுக் கொன்ற சட்ட மேலவை உறுப்பினர் மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் கயாவில் தனது காரை முந்திச் சென்ற காரணத்திற்காக 19 வயது மாணவன் ஆதித்யா சச்தேவாவை சட்டமேலவை உறுப்பினர் மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ்(24) சுட்டுக் கொலை செய்தார்.

சனிக்கிழமை இரவு நடந்த சம்பவத்தை அடுத்து ராக்கி தலைமறைவாகிவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராக்கியை தேடி வந்தனர். இதற்கிடையே மனோரமா தேவியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு கயா அருகே உள்ள கம்பெனி ஒன்றில் பதுங்கியிருந்த ராக்கியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் ராக்கி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீஸ் அதிகாரி கரிமா மாலிக் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் முன்பு முகத்தை மூடியபடி அழைத்து வரப்பட்ட ராக்கி கூறுகையில், நான் தலைமறைவாக இல்லை. நான் டெல்லியில் இருந்தேன். என் தாய் அழைத்ததால் வந்தேன். நான் யாரையும் சுடவில்லை என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications