முன்னாள் அமெரிக்க தூதரக கட்டிடத்தை ரூ.750 கோடிக்கு வாங்கிய தொழில் அதிபர் பூனாவாலா
மும்பை: மருந்து தொழிற்சாலை அதிபர் சைரஸ் பூனாவாலா மும்பையில் உள்ள லிங்கன் ஹவுஸ் என்ற பங்களாவை ரூ.750 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.
மும்பையில் அமெரிக்க தூதரகம் மஹாராஜா காலத்து பெரிய பங்களாவில் செயல்பட்டு வந்தது. அந்த பங்களாவிற்கு பின்னர் லிங்கன் ஹவுஸ் என்று பெயரிடப்பட்டது. 1957ம் ஆண்டில் இருந்து அங்கு செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து காலியான லிங்கன் ஹவுஸை விற்பனை செய்வதாக அமெரிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் பங்களாவின் விலையை கேட்டுவிட்டு பலரும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர். இதனால் அந்த பங்களா கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனை ஆகாமல் இருந்தது.

பூனாவாலா
பாம்பு கடிக்கு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ள பெரும் பணக்காரரான சைரஸ் பூனாவால் லிங்கன் ஹவுஸை ரூ.750 கோடி கொடுத்து தற்போது வாங்கியுள்ளார். இதுவரை இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட பங்களா என்றால் அது லிங்கன் ஹவுஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிர்லா
முன்னதாக கடந்த வாரம் ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார் மங்கலம் பிர்லா மும்பையில் உள்ள ஜாட்டியா ஹவுஸ் பங்களாவை ரூ. 425 கோடிக்கு வாங்கினார்.

கோத்ரேஜ்
கடந்த ஆண்டு கோத்ரேஜ் குடும்பத்தைச் சேர்ந்த மெஹ்ராங்கிர் மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோமி பாபாவின் வீட்டை ரூ.372 கோடிக்கு வாங்கினார்.

ஜிந்தால்
கடந்த 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள மஹேஸ்வரி ஹவுஸ் பங்களாவை ஜே.எஸ்.டபுள்யூ. ஸ்டீல் அதிபர் சஜ்ஜன் ஜிந்தால் ரூ.400 கோடிக்கு வாங்கினார்.

பங்களாக்கள்
பூனாவாலா, பிர்லா, மெஹ்ராங்கிர் மற்றும் சஜ்ஜன் ஜிந்தால் ஆகியோர் வாங்கிய பங்களாக்கள் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications