கேரளாவில் வேகமாக பரவுது பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் உம்மன் சாண்டி உயர் மட்ட ஆலோசனை நடத்தி காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.
கேரளாவின் குட்டநாடு மற்றும் அதன் பக்கத்து பகுதிகளில் கடந்த வாரம் சுமார் 17 ஆயிரம் வாத்துகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. பறவை காய்ச்சல் தாக்கி அவை இறந்திருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமா, சம்பவ இடத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இறைச்சிக்காக கோழிகளை கொள்முதல் செய்ய கூடாது என்று மாநில கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டது.

உயிரிழந்த வாத்துகளின் இறைச்சி மாதிரிகள் போபாலிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், பறவை காய்ச்சல் காரணமாகவே வாத்துகள் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டி உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து நோய் தடுப்பு குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
குட்டநாடு பகுதி தண்ணீர் பாயும் செழிப்பான பகுதி. பிற பகுதியில் இருந்து நோய் வைரஸ் தண்ணீர் மூலம் இங்கு வந்திருக்கலாம் என்று கேரள அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். குமரகம் பறவைகள் சரணாலயமும் இப்பகுதியில்தான் உள்ளதால், பறவைகள் சரணாலயத்திலுள்ள பறவைகளுக்கு இந்த நோய் பரவியுள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications