கேரளாவில் வேகமாகப் பரவம் பறவைக் காய்ச்சல்.. இதுவரை 12 பேர் பலி.. பொதுமக்கள் பீதி
திருவனந்தபுரம்: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்பட பல மாநிலங்களை பறவை காய்ச்சல் வேகமாக தாக்கியது. இந்த மாநிலங்களில் இந்த காய்ச்சலுக்கு ஏராளமானோர் பலியாகினர்.
கேரளாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு இறைச்சி கோழிகள் கொண்டு செல்ல சில மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து பறவை காய்ச்சலை கட்டுபடுத்த கேரள சுகாதார துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் பயனாக இந்த காய்ச்சல் அங்கு கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் இரண்டு வருடங்களாக தலை காட்டாமல் இருந்த பறவை காய்ச்சல் தற்போது அங்கு வேகமாக பரவி வருகிறது. இதுவரை மட்டும் 12 பேர் பலியாகி உள்ளனர்.
கர்ப்பிணிகள் உள்பட 800 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில் 51 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அங்கு கடும் பீதி நிலவுகிறது. இதையடுத்து இந்த நோயை கட்டுபடுத்த கேரள சுகாதார துறை மீண்டும் களம் இறங்கியுள்ளது.
தற்போது கேரளாவில் மழை காலம் என்பதால் பறவை காய்ச்சலை உருவாக அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எனவே இந்த வைரஸ்களை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளை கேரள சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது. கேரளாவின் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் பறவை காய்ச்சல் பரவி வருவதால் அங்கிருந்து வரும் இறைச்சி கோழிகள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து கேரளா ஆலோசித்து வருகிறது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications