கடவுளே ஆனாலும் ராமர் செய்தது தப்பு... பாட்னாவில் ஒரு பரபரப்பு கேஸ்!
பாட்னா: ராமர், தனது மனைவி சீதையை, ஒரு சலவைத் தொழிலாளியின் குற்றச்சாட்டை மட்டும் அடிப்படையாக வைத்து கைவிட எடுத்த முடிவு அநீதியானது என்று கூறி பீகார் மாநிலத்தில் ஒருவர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கூர் சந்தன் சிங். இவர் ஒரு வழக்கறிஞர். இவர் பாட்னா கோர்ட்டில் ஒரு வழக்குப் போட்டுள்ளார்.
அதில், கடவுள் ராமர், தனது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டு விட்டார். இந்த முடிவை அவர் சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து எடுத்துள்ளார்.

இந்த முடிவு அநீதியானது. முறையாக விசாரிக்காமல், குற்றச்சாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மனைவியைத் தண்டித்துள்ளார் ராமர்.
அண்ணன் ராமரின் செயலுக்கு அவரது தம்பி லட்சுமணும் உடந்தையாக இரு்துள்ளார். உண்மைகளை அறியாமல் லட்சுமண், தனது அண்ணி சீதைய அவமதித்துள்ளார். இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார் இந்த வழக்கறிஞர். இந்த மனுவை என்ன செய்வது என்று கோர்ட் விசாரித்து முடிவை அறிவிக்கவுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications