60,000 கொடுத்தால் 4,000 தான் வருது! முதலைக் கண்ணீர்..பாஜகவை பதற வைக்கும் ‘தமிழர்’ பிகே பாண்டியன்..!
புவனேஷ்வர்: ஒடிசாவுக்குத் திரும்பத் திரும்ப வரும் பாஜக தலைவர்கள் இதுவரை ஒடிசாவுக்கு எதுவும் செய்யாததால் அவர்களின் பிரச்சாரத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பிஜேடி கட்சியின் முக்கிய தலைவருமான விகே பாண்டியன் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் 1 கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

ஒடிசா மாநிலத்தை பொருத்தவரை மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சட்டமன்றத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடக்கிறது.
ஒடிசா தேர்தல்: இதுவரை இரண்டு கட்ட தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில் இன்னும் இரண்டு கட்ட தேர்தல்கள் ஒடிசா மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவின் பார்வை தற்போது ஒடிசா மாநிலத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. அங்கு ஏற்கனவே மூன்று முறை பிரசாரம் மேற்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அமைச்சர் அமித் ஷாவும் அங்கு முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிகே பாண்டியன்: ஒடிசா மாநிலத்தைப் பொறுத்தவரை 25 ஆண்டுகளாக முதலமைச்சராக நவீன் பட்நாயக் தொடர்கிறார். அவரின் நம்பிக்கையை பெற்ற பிகே பாண்டியன் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலேயே இணைத்துக் கொண்டார். தற்போது பிஜு ஜனதா தளம் கட்சியின் நம்பிக்கை தளபதிகளில் ஒருவராக இருக்கும் அவர் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறார். இதனால் அவரை நோக்கி விமர்சனக் கணைகளை கொடுத்து வருகிறது பாஜக.
டார்கெட் பாஜக: கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவின் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது எனவும், பூரி ஜெகநாதர் கோயிலில் பொக்கிஷ அறையின் காணாமல் போன சாவி தமிழகத்தில் இருக்கிறது என விகே பாண்டிய மறைமுகமாக விமர்சித்து பேசினார். மேலும் அமித் ஷா ஒடிசாவை ஒரு தமிழர் ஆள வேண்டுமா அல்லது ஒடியா மொழி பேசும் இளைஞர் ஆள வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.
பாண்டியன் பதிலடி: இந்நிலையில் ஒடிசாவுக்குத் திரும்பத் திரும்ப வரும் பாஜக தலைவர்கள் இதுவரை ஒடிசாவுக்கு எதுவும் செய்யாததால் அவர்களின் பிரச்சாரத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பிஜேடி கட்சியின் முக்கிய தலைவருமான பிகே பாண்டியன் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," பாஜக தலைவர்கள் ஒடிசாவுக்கு எதுவும் செய்யாததால், அவர்களின் பிரச்சாரத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒடிசாவிடம் இருந்து சுமார் ரூ.60,000 கோடியை எடுத்துக் கொண்டு ரூ. 4,000 கோடி முதல் 5,000 கோடி வரை மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறார்.
முதலைக் கண்ணீர்: ஆனால் ஒடிசா கனிம வளம் நிறைந்த மாநிலம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள் ஒடிசாவுக்கு 4,000 கோடி கொடுக்கிறீர்கள்... நீங்கள் கடந்த 20 வருடங்களாக நிலக்கரியை எங்களிடமிருந்து பெறுகிறீர்கள் எங்களுக்கு மாசு கிடைக்கிறது.. ஆனால் அனைத்து இலாபங்களையும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.
பாஜவின் பழிவாங்கல்: அந்த இரண்டு அதிகாரிகளும் ஒடிசாவின் சிறந்த அதிகாரிகள் என்றும், ஒடிசாவில் நக்சலிசத்தை தங்கள் உயிரைப் பணயம் வைத்து கட்டுப்படுத்துவதில் இருவரும் பெரும் பங்காற்றியுள்ளனர்.. அவர்களின் அர்ப்பணிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக நாட்டின் 'உயர் அதிகாரிகளால்' அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிஜேடி கைகளில் வெற்றி இருக்கும் நிலையில், தோல்வியை ஜீரணிக்க முடியாத பாஜகவின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை இது" என்றார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications