ஆட்சி அமைப்பதில் தொடரும் குழப்பம்- டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?
டெல்லி: டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
70 தொகுதிகள் கொண்டது டெல்லி சட்டசபை. இம்மாநிலத்துக்கான தேர்தலில் பாஜக 31 இடங்களையும் அம் ஆத்மி கட்சி 28 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சியானது 8 இடங்களையே கைப்பற்றியது.
பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளத்துக்கு ஓர் இடம் கிடைத்தது. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேட்சை வேட்பாளருக்கு தலா ஓர் இடம் கிடைத்தது. ஆட்சி அமைக்க 36 உறுப்பினர்கள் தேவை. ஆனால், எந்த ஒரு கட்சிக்கும் 36 இடங்கள் கிடைக்கவில்லை.

இதனால் அடுத்து ஆட்சி அமைப்போம் என்ற கனவில் இருந்த பாஜக கவலை அடைந்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்காக குறுக்கு வழிகளைக் கையாள மாட்டோம் என பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.
இந் நிலையில், பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினர். காஜியாபாதில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜரிவால் இல்லத்தில் இக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்குக் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ், நாங்கள் ஆட்சி அமைக்கப் போவதில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சிக்குரிய பணியை ஆற்றுவோம். பெரும்பான்மை பலம் உள்ள கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டும். எங்களுக்கு அந்த பலம் இல்லை. அதே நேரத்தில் அதிகத் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள ஒரு கட்சி, எங்களை ஆட்சி அமைக்கும்படி கூறுவது புதிதாகவும், வியப்பாகவும் இருக்கிறது என்றார்.
இத்தகைய குழப்பமான சூழலில் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தக் கூடும் என்றே தெரிகிறது. தற்போது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு லோக்சபா தேர்தலுடன் மீண்டும் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications