ராகுல் காந்தியே இப்படி செய்யலாமா? நாய் பிஸ்கட்டை தொண்டருக்கு தந்ததாக பாஜக புகார்.. வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் ராகுல் காந்தி நாய் பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு வழங்கியதாக பாஜக வீடியோ வெளியிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை மார்ச் மாதம் 20ம் தேதி மும்பையில் முடிவடைய உள்ளது. மொத்தம் 66 நாட்களில் மொத்தம் 6,713 கிலோமீட்டர் தொலைவை ராகுல் காந்தி கடக்க உள்ளார்.

BJP alleges Rahul Gandhi gives biscuit to party worker after dogs refuses to eat in Bharat Jodo Nyaya Yatra

கடந்த 2022ம் ஆண்டு கன்னியாகுமரி-காஷ்மீர் இடையேயான பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி நடந்து சென்றார். ஆனால் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி நடந்து செல்வதோடு, வாகனங்களிலும் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்பது அடிக்கடி விவாதத்தை கிளப்பி வருகிறது. மணிப்பூர், மேற்கு வங்க மாநிலத்தில் யாத்திரைக்கு அனுமதி கொடுக்க மறுத்தது, அசாமில் ரூட்டை மாற்றி பயணித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது, ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்தது உள்ளிட்ட விஷயங்களால் தொடர்ந்து இந்த யாத்திரை என்பது பேசும் பொருளாகவே இருந்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது ராகுல் காந்தி புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்பது ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது. ராஞ்சியில் நடந்த யாத்திரையின்போது ராகுல் காந்தி காரின் மேற்புறத்தில் அமர்ந்திருந்தார். அவர் அருகே குட்டி நாய் ஒன்றும் இருந்தது. ராகுல் அந்த நாய்க்கு பிஸ்கட் வழங்கினார். இதுதொடர்பான வீடியோ என்பது இணையதளங்களில் வெளியானது.

இந்நிலையில் தான் அந்த வீடியோவை பாஜகவின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் பூத் ஏஜென்ட்டுகளை நாயுடன் ஒப்பிட்டு பேசினார். இப்போது ராகுல் காந்தி நாய்க்கு உணவாக பிஸ்கட் வழங்கினார். அதனை நாய் சாப்பிட மறுத்த நிலையில் அந்த பிஸ்கட்டை அவர் கட்சி தொண்டருக்கு வழங்கி உள்ளார். இப்படி கட்சியின் தலைவர் மற்றும் பட்டத்து இளவரசர் கட்சியினரை நாய் போல் நடத்தினால் விரைவில் அந்த கட்சி மாயமாகிவிடும்'' என தெரிவித்துள்ளார்.

அதாவது அமித் மாளவியா பகிர்ந்த வீடியோவில் ராகுல் காந்தி குட்டி நாய்க்கு பிஸ்கட் வழங்குகிறார். அதனை அது ஏற்க மறுத்த நிலையில் அந்த பிஸ்கட்டை ராகுல் காந்தி தொண்டரிடம் எடுத்து வழங்கி அவரிடம் கைக்குலுக்குகிறார். ராகுல் காந்தி இந்த பிஸ்கட்டை எந்த நோக்கத்தில் அவரிடம் வழங்கினார் என்பது தெரியவில்லை. இந்த வீடியோவை தற்போது இணையதளத்தில் பாஜகவினர் பகிர்ந்து ராகுல் காந்தியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+