அடிச்சு தூக்கிய பாஜக.. நாகலாந்தில் மீண்டும் மலர்கிறது பாஜக.. எக்ஸிட் போல் முடிவில் அதிரடி
நாகாலாந்து எக்ஸிட் தேர்தல் கணிப்புகளை தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன
கோஹிமா: நாகாலாந்தில் இன்றைய தினம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கான எக்ஸிட் போல்கள் வெளியாகி உள்ளன.. அந்த வகையில், நாகாலாந்தில் என்டிபிபி- பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தை பொறுத்தவரையில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் (என்டிபிபி) தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது..
60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில், கடந்தமுறை நாகா மக்கள் முன்னணி 26 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது..

பாஜக வேட்பாளர்
ஆனால் என்டிபிபி 18 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் என 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த தேசியவாத ஜனநாயக முன்னணி, சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றியது. இப்போது, உள்ளூர் நாகா கட்சி தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் (என்டிபிபி) கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. பாஜக - என்டிபிபி கூட்டணி அமைத்து 20 - 40 என்ற விகிதத்தில் தேர்தல் களம் காணுகிறது. அதே போல, காங்கிரஸ் கட்சி 23 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான என்.பி.எப். 22 இடங்களிலும் களம் காணுகின்றன.. மொத்தமுள்ள 60 இடங்களில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது..

வடகிழக்கு ஜனநாயக முன்னணி
அதாவது நாகலாந்தில் அகுலுடோ சட்டசபை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் திடீரென வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், பாஜக வேட்பாளர் பாஜக வேட்பாளர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டார். எனவே, மற்ற 59 இடங்களில் இன்று தேர்தல் நடந்து முடிந்தது. பாஜக கூட்டணி + நாகா மக்கள் முன்னணி + காங்கிரஸ் + ஜனதா தளம், ஆம் ஆத்மி + ஆர்பிபி + வடகிழக்கு ஜனநாயக முன்னணி போன்ற புதிய கட்சிகளும் தேர்தல் களமிறங்கின..

அதிரடி பிரச்சாரம்
இதில் ஆளும் கட்சி இங்கு முழு வீச்சில் இறங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டது.. அதுபோலவே, கடந்த வாரங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா இருவருமே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.. இதற்கு பிறகு பிரதமர் மோடியும் பிரச்சாரத்துக்கு சென்றிருந்தார்.. எங்கு திரும்பினாலும் பாஜகவின் பிரச்சாரங்களாகவே அம்மாநிலத்தில் தென்பட்டது.. ஆனால், காங்கிரஸோ பலவீனமடைந்தே தென்பட்டது.. பாஜகவை விமர்சித்து பிரச்சாரங்களை செய்தாலும், அந்த கூட்டணிக்கு இணையாக ஈடுகொடுக்க முடியாமல் போனதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறிவந்தனர்.

கருத்து கணிப்புகள்
இந்நிலையில், இன்றைய தினம் கருத்து கணிப்புகள், அதாவது, எக்ஸிட் போல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.. அந்த வகையில் இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதன்படி, நாகாலாந்தில் என்டிபிபி- பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி: 38-48 இடங்களையும், என்பிஎப் 3-8 இடங்களையும், காங்கிரஸ் 1-2 இடங்களையும் பிடிக்கும், மற்றவை 5-15 வரையிலான இடங்களை பிடிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது... இது ஒரு கருத்து கணிப்புகள் என்றாலும்கூட, பெரும்பான்மையான இடங்களை பாஜக பிடித்துள்ளது, அக்கட்சிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications