இடதுசாரி கோட்டை தகர்ந்தது.. திரிபுராவில் பாஜக கூட்டணி அபார வெற்றி
அகர்த்தலா: இடதுசாரிகள் கோட்டையாக இருந்த திரிபுரா மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.
திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் 18ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளுடன், திரிபுரா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டன.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் பாஜக கூட்டணி மற்றும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சியினரும் மாறி, மாறி முன்னிலை பெற்றனர்.

த்ரில் திரிபுரா
இதனால் த்ரில் ஏற்படுத்தியது திரிபுரா முடிவுகள். இதனிடையே மாலை முதல் திடீரென பாஜக கூட்டணி அபார முன்னிலை பெறத்தொடங்கியது. இரவு 8.30 மணி நிலவரப்படி, அறுதி பெரும்பான்மைக்கு தேவையான 31 தொகுதிகளைவிட அதிகமாக, பாஜக கூட்டணி 43 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. எனவே, பாஜக கூட்டணி திரிபுராவில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது.

காங்கிரஸ் பூஜ்யம்
அதேநேரம் மார்க்சிஸ்ட் கட்சி 16 தொகுதிகளில்தான் வெற்றிபெற முடிந்தது. காங்கிரசுக்கு கிடைத்ததோ பூஜ்யம்தான். அக்கட்சி மேகாலயா தவிர நாகாலாந்திலும் பூஜ்யம்தான் பெற்றது.

கம்யூனிஸ்ட் கோட்டை
திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்வராக இருந்து வந்தார். ஆனால், இடதுசாரி ஆதிக்கம் அம்மாநிலத்தில் முடிவுக்கு வந்துள்ளது. மாணிக் சர்க்கார் உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தோல்வியடைந்தனர்.

பாஜக மகிழ்ச்சி
இதையடுத்து, பாஜக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களது வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையடுத்து, திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு அமோகமாக வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications