”சத்தியமா நான் ஏழைங்கோவ்” சொல்கிறார் பாஜகவின் பெரும்பணக்காரர் ஸ்ரீராமுலு
பெல்லாரி: "நான் ஒரு சாதாரண ஏழை" என்று மனசாட்சியே இல்லாமல் கூறியுள்ளார் பாஜகவின் கோடீஸ்வரரான ஸ்ரீராமுலு.
மக்களவை தேர்தலில் கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடவுளின் உதவியை நாடும் வகையில் கருப்பு பசுக்களுக்கு தானியங்களை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், ''என் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. நான் எந்த குற்றத்திற்காகவும் தண்டனை பெறவில்லை. நான் ஒரு சாதாரண ஏழை. என்னுடைய தந்தை ரெயில் நிலையத்தில் ஒரு சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்தவர்'' என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில் ஸ்ரீராமுலு இந்த தேர்தலில் தாக்கல்செய்துள்ள வேட்புமனுவில் தனக்கு ரூபாய் 15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார். அவரது வீடு மிகப்பெரிய உணவகத்தை போன்று நீச்சல் குளம் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளோடு பிரம்மாண்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு திட்டமிட்ட கொலை வழக்கிலும், சுரங்க ஊழல் புகாரிலும் ஸ்ரீராமுலு சிக்கியிருந்தார்.
சமீபத்தில் ஸ்ரீராமுலு வாக்காளர்களை கவரும் வகையில் தனது நண்பர்கள் ,ஆதரவாளர்களின் மூலம் பணம் பரிசு பொருட்களை கொடுத்து வருவதாக தேர்தல் அதிகாரிகள் அவரது நண்பர்கள் வீட்டிலிருந்து ரூபாய் 20 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications