மக்களே எனக்கு ஓட்டு போடுங்கள்.. இல்ல நான் தூக்குல தொங்குவேன்- மாஸ் காட்டும் பாஜக வேட்பாளர்
Recommended Video

ஜெய்ப்பூர்: வருகிற சட்டசபை தேர்தலில் எனக்கு வாக்களிக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் ஸ்ரீசந்த் கிருப்லானி மிரட்டல் விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு பாஜக ஆட்சியை தக்க வைக்கவும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும் போராடி வருகிறது.
200 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ராஜஸ்தான் சட்டசபையில் அமைச்சராக உள்ளவர் பாஜகவின் ஸ்ரீசந்த் கிருப்லானி ஆவார். நிம் பஹாரா தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெற்றி
இதையடுத்து சித்தோட்கட் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அப்போது பாஜகவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசினார். அவர் கூறுகையில் நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

வித்தியாசமான முறை
அப்படி எனக்கு வாக்களிக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது போன்ற வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் தெலுங்கானாவிலும் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

வித்தியாசம்
இந்த தேர்தலில் டிஆர்எஸ் , பாஜக , தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அனைவரையும் தூக்கிச் சாப்பிடும்படியாக சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்தில் வித்தியாசத்தை கடைபிடித்துள்ளார். ஜக்டியல் மாவட்டத்தில் கொருட்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் அகுலா ஹனுமந்த்.

காங் ஆட்சி
இவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது ஒரு ஜோடி செருப்பை வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கிறார். எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தன்னை பொது இடத்தில் வைத்து இந்த செருப்பால் அடிக்குமாறு கூறி வாக்கு சேகரிக்கிறார்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!












Click it and Unblock the Notifications