அமளி துமளி- சண்டை மன்றங்களான குஜராத், ஒடிஷா சட்டசபைகள்- பாஜக அமைச்சர் படுகாயம்!
குஜராத் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டசபைகள் இன்று அமளிகாடானது. குஜராத் சட்டசபை தகராறில் காங், பாஜக எம்.எல்.ஏ.க்கள் காயமடைந்தனர்.
காந்திநகர்/ புவனேஷ்வர்: குஜராத் மற்றும் ஒடிஷா மாநில சட்டசபைகளில் இன்று பயங்கர அமளி ஏற்பட்டது. குஜராத் சட்டசபையில் பாஜக பெண் எம்.எல்.ஏ.வை காங்கிரஸ் எம்.எல்.ஏ தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தமிழக சட்டசபையில் மார்ஷல்கள் சீருடையில் நுழைந்த போலீஸ் உயர் அதிகாரிகள் திமுக எம்.எல்.ஏக்களைத் தாக்கிய பஞ்சாயத்து இன்னும் ஓயவில்லை. இன்று ஒரே நாளில் குஜராத் மற்றும் ஒடிஷா சட்டசபைகள் அமளி துமளி ஏற்பட்டு அடிதடி அரங்கேறியிருக்கிறது.
குஜராத் சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரேஷ் தனானி கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு வேளாண் துறை அமைச்சர் சிமன்பாய் சபரியா பதில் அளித்துக் கொண்டிருந்தார். 1995-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் குஜராத் விவசாயிகள் நிலைமை குறித்து அவர் விவரித்துக் கொண்டிருந்தார்.

முகத்தில் குத்து
இதில் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரேஷ் தனானி, அமைச்சர் சிமன்பாயிடம் இருந்த பேப்பர்களை பிடுங்கி கிழித்து எறிந்து அவரை தாக்க முயன்றார். அப்போது திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ. பல்தேவ்ஜி தாக்கூர் எழுந்து பாஜக எம்.எல்.ஏக்கள் இருக்கை நோக்கி ஓடி இணை அமைச்சரும் பாஜக பெண் எம்.எல்.ஏவுமான நிர்மலா வத்வானி முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டு கீழே தள்ளிவிட்டார்.

எங்களைத் தாக்கினாங்க...
இதில் நிர்மலா வத்வானி கை முறிந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, பாஜக எம்.எல்.ஏக்கள்தான் எங்களைத் தாக்க வந்தனர். சட்டசபை வீடியோ காட்சிகளைப் பார்த்தாலே தெரியும் என மறுப்பு தெரிவித்துள்ளது. தாக்கியதாக கூறப்படும் பல்தேவ்ஜி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கெளதம்பாய் இருவரும் கை, கால்களில் கட்டுப் போட்டு தாங்கள் தாக்கப்பட்டோம் என கூறினர்.

ஜாதி மோதல் அபாயம்
அத்துடன் படேல் மற்றும் தாக்கூர் ஜாதி எம்.எல்.ஏக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர் எனவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதனால் சட்டசபை மோதல் ஜாதி ரீதியான வன்முறையாக வெடிக்கும் நிலை உருவாகி உள்ளது.

ஒடிஷாவிலும்
இதேபோல் ஒடிஷா மாநில சட்டசபையும் இன்று அமளி காடானது. பஞ்சாயத்து தேர்தல் வன்முறைகளை முன்வைத்து காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏக்களை எழுப்பியதால் பெரும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் சபையை நடத்த முடியாமல் ஒத்திவைக்க நேரிட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications