For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவிலும் தமிழர்களை வஞ்சித்த பாஜக- 1 கோடி பேரில் ஒருவருக்கு கூட சீட் தராததால் கடும் அதிருப்தி!

கர்நாடகாவில் தேர்தலில் போட்டியிட ஒரு தமிழருக்கு கூட பாஜக வாய்ப்பு தரவில்லை.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    பெண்களை கவர கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி அறிவிப்பு-வீடியோ

    பெங்களூரு: கர்நாடகாவில் தமிழர்கள் 1 கோடி பேர் வாழ்கின்ற போதும் சட்டசபை தேர்தலில் ஒரு தமிழருக்கு கூட பாஜக சீட் தராதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சம்பத்ராஜ், மதச்சார்பற்ற ஜனதா தளம் பக்தவத்சலம், ஆம் ஆத்மியின் ரேணுகா விஸ்வநாதன், இளங்கோவன் என 4 தமிழர்கள்தான் போட்டியிடுகின்றனர். பாஜக, இடதுசாரிகள் வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு தமிழர் கூட இல்லை.

    BJP denies tickets to Tamils in Karnataka Election

    2009-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து வந்தனர். கடந்த 2014 லோக்சபா தேர்தலிலும் பாஜகவுக்கு தமிழர்கள் பெருமளவு வாக்குகளை செலுத்தினர்.

    ஆனால் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது முதல் தமிழர்களை தீண்டத்தகாதவர்களைப் போலத்தான் பாஜக நடத்தி வருகிறது. தமிழகத்தின் அத்தனை உரிமைகளையும் கபளீகரம் செய்து முதுகில் குத்தி வருகிறது மத்திய பாஜக அரசு.

    நீட் தேர்வில் தமிழக மாணவர்களை உலகில் எங்கும் இல்லாத கொடுமையாக 'கல்வி' அகதிகளாக ராஜஸ்தான் பாலைவனத்திலும் சீனாவின் எல்லையான சிக்கிமுக்கும் துரத்திவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு தமிழர்களை மட்டுமல்ல கர்நாடகாவில் தங்களது வாக்கு வங்கியாக இருந்து வந்த தமிழர்களையும் கிள்ளுக்கீரையாகத்தான் பாஜக நடத்துகிறது.

    பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, சாம்ராஜ்நகர் என மொத்தம் 40 தொகுதிகளில் தமிழர்களே தீர்மானிக்கும் சக்திகள். பெங்களூருவில் கன்னடர்களுக்கு சரிசமமாக தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனாலும் பெங்களூருவில் தமிழர்கள் வாழும் தொகுதிகளில் கூட தமிழரை வேட்பாளராக நிறுத்த பாஜக முன்வரவில்லை.

    கோலார் தங்கவயல் முழுவதும் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனாலும் பாஜக அங்கும் தமிழரை வேட்பாளராக நிறுத்தவில்லை. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழக பாஜகவினர் கர்நாடகா தேர்தலில் வேலை செய்ய கிளம்பிவிட்டனர்.

    அதுவும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ராமேஸ்வரம் கோவிலில் கர்நாடகாவில் பாஜக வெல்ல யாகம் கூட வளர்த்தார். தமிழக பாஜக தலைவர்கள் கர்நாடகாவிலேயே டேரா போட்டு வாய் வலிக்க பிரசாரம் செய்வதை என்னவென்று சொல்வது?

    English summary
    Karnataka Tamils were upset over BJP denied the tickets in Assembly Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X