வெறுப்பு பேச்சு.. தேர்தல் நேரத்தில் ’தலைவலி’ ராஜஸ்தானில் கட்சியின் முக்கிய தலைவரை கழற்றிவிட்ட பாஜக
ஜெய்பூர்: ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது குருத்வாரர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான சந்தீப் தயாமாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் கடந்த 1993 ஆண்டுக்கு பிறகு இதுவரை ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை. எனவே இந்த வரலாற்றை மேலும் நீட்டித்து வெற்றி வாகை சூட பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக வரும் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கும் மேல் வென்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த முறை ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலையை பயன்படுத்தி காங்கிரசை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளையில், கடந்த கால வரலாறுகளை மாற்றி ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரசும் பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 6 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நெருங்கி வந்து விட்ட நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கிறது. தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டு இருக்கிறது.
இதனிடையே, ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான சந்தீப் தயாமா, சீக்கிய குருத்வாரா குறித்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சன்தீப் தயமா கூறுகையில், 'இங்கு எத்தனை மசூதிகள், குருத்வாராக்கள் கட்டப்படுகிறது என்பதை பாருங்கள். இது நமது எதிர்காலத்திற்கு அல்சர் போன்றது. எனவே இதை வேரோடு பிடுங்கி எறிவது நமது கடமையாகும்" என்றார்.
குருத்வாரா குறித்த இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான அமரிந்தர் சிங்கும் கடும் கண்டனத்தை தெரிவிதததோடு, சந்தீப் தயாமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, சந்தீப் தயாமாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்குவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்.. ஹார்முஸ் தொல்லை இனி இல்லை..! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications