For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தல்: பாஜகவின் திட்டமிட்ட உழைப்பு வீண் போகவில்லை

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் உத்தர பிரதேசத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.

15 மாநிலங்களில் காலியான 57 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் ஜூன் மாதம் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் செய்த 30 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

BJP Gains In Rajya Sabha Elections, Kapil Sibal Wins From UP

இதையடுத்து மீதமுள்ள 7 மாநிலங்களில் உள்ள 27 இடங்களுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

* ராஜ்யசபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* உத்தர பிரதேசத்தில் உள்ள மொத்தமுள்ள 11 இடங்களில் சமாஜ்வாடி கட்சி 7 இடங்களிலல் வென்றுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

* ஹரியானாவில் உள்ள இரண்டு இடங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது.

* ஹரியானாவில் பாஜக ஆதரவுடன் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரா எதிர்பாராவிதமாக வெற்றி பெற்றுள்ளார்.

* கர்நாடகாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்கர் பெர்ணான்டஸ், கே.சி. ராமமூர்த்தி வெற்றி பெற்றுள்ளனர்.

* கர்நாடகாவில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் பி.எம். பரூக் தோல்வி அடைந்துள்ளார்.

* ராஜஸ்தானில் உள்ள 4 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தானில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.

* மத்திய பிரதேசத்தில் 3 இடங்களில் 2 இடங்களில் பாஜகவினரும், ஒரு இடத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் விவேக் தங்காவும் வெற்றி பெற்றுள்ளனர்.

* உத்தரகண்டில் உள்ள ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதீப் தம்தா கைப்பற்றியுள்ளார்.

ராஜ்யசபாவில் மைனாரிட்டியாக இருக்கும் பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஆறுதலாக உள்ளது.

* ராஜ்யசபாவில் 60 உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது.

இந்நிலையில் பாஜக 51 இடங்களை பிடித்துள்ளதன் மூலம் காங்கிரஸ், பாஜக இடையேயான எண்ணிக்கையில் இருந்த வித்தியாசம் குறைந்துள்ளது.

English summary
BJP has actually gained from the Rajya Sabha election held on saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X