இந்த முறை மிஸ் ஆகக்கூடாது.. ஸ்பெஷல் டீமை இறக்கும் அமித் ஷா.. மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக?
கொல்கத்தா: தமிழகத்தை போலவே மேற்கு வங்கத்தில் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த முறை பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்த பாஜக இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இறங்குகிறது. இதற்காகத் திட்டம் போட்டு வேலையை பாஜக ஆரம்பித்துள்ளது.!
தமிழகத்துடன் மொத்தம் 5 மாநிலங்களில் சீக்கிரமே தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முக்கியமான மாநிலம் என்றால் அது மேற்கு வங்கம். தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஆரம்பித்துள்ளது.

பாஜக தீவிரம்
இந்த தேர்தலில் பாஜக டார்கெட் செய்யும் மாநிலங்களில் முக்கியமானது பாஜக. கிட்டத்தட்ட ஜீரோவில் இருந்து ஆரம்பித்த பாஜக கடந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. இந்த முறை அங்கு விட்டுவிடக்கூடாது என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. அங்குத் தேர்தல் பணிகளையும் பாஜக ஆரம்பித்துள்ளது.
ஸ்பெஷல் டீம்
இப்போது தனது தேர்தல் அறிக்கையை உருவாக்க பாஜக ஒரு குழுவை அறிவித்துள்ளது. 2024 மார்ச்சில் பாஜகவில் இணைந்த முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் தபஸ் ராயிடம் பாஜக தனது தேர்தல் அறிக்கையை உருவாக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. மேலும், இந்தக் குழுவில் பொருளாதார நிபுணர் அசோக் லஹிரி ஒருங்கிணைப்பாளராகவும், அசன்சோல் தெற்கு எம்.எல்.ஏ. அக்னிமித்ரா பால் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது..
மேலும், இந்தக் குழுவில் சித்த ரஞ்சன் மண்டல், நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திகாவ், மூத்த தலைவர் ஸ்வபன் தாஸ் குப்தா, சிசீர் பஜோரியா, அமல்காந்தி ரே, வைஷாலி தால்மியா, அநிர்பன் கங்குலி, மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் டெப்ஜித் சர்க்கார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.. தேர்தல் அரசியல் மற்றும் கொள்கை வகுப்பதில் அனுபவம் கொண்ட பல மூத்த தலைவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
முக்கிய தலைவர்கள்
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனவரி 30, 31 தேதிகளில் மேற்கு வங்கத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். அவரது இரண்டு நாள் பயணத்தில், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க முக்கியக் கூட்டங்களை நடத்துவார். அமித் ஷா பயணத்திற்கு முன்பு, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் ஜனவரி 27ம் தேதி மேற்கு வங்கத்திற்குச் செல்கிறார்.
அவர் பாஜக தேசிய தலைவராகத் தேர்வான பிறகு மேற்கு வங்கம் செல்வது இதுவே முதல்முறையாகும். பாஜக கோட்டைகளாகக் கருதப்படும் துர்காபூர் மற்றும் ஆசன்சோல் பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்கிறார்.
மேற்கு வங்கம்
பாஜகவைப் பொறுத்தவரை 2019 லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் கணிசமான இடங்களில் வென்றது. 2014ல் வெறும் 2 லோக்சபா இடங்களில் மட்டுமே வென்ற பாஜக 2019ல் 18 இடங்களைக் கைப்பற்றி அசத்தியது. 2021 மேற்கு வங்கச் சட்டசபைத் தேர்தலை பாஜக எதிர்கொண்டது. ஆனால், பாஜகவால் 77 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 215ல் வென்று திரிணாமுல் ஆட்சியைப் பிடித்தது.
கடந்த 2021ல் 77 இடங்களில் வென்ற நிலையில், அதை அப்படியே இரட்டிப்பாக்கி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இறங்கியுள்ளது. இருப்பினும், அங்கு மம்தா மிகக் கடுமையான போட்டியைத் தரும் நிலையில், மேற்கு வங்க அரசியல் சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications