பாஜகவின் 'தெனாவெட்டு' அரசியலுக்கு கை கொடுக்கிறதா (தூங்கும்) தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்குகள்?
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்குகளில் தீர்ப்பு வராததே பெரும்பான்மை இல்லாத பாஜக கர்நாடகவில் ஆட்சி அமைப்போம் எனக் கூற காரணம்.
Recommended Video

பெங்களூரு: கர்நாடகா தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத போதும் ஆட்சி அமைப்போம் என பாஜக தெனாவெட்டு காட்டுவதற்கு காரணமே நீதிமன்றங்களில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் தூங்கிக் கொண்டிருப்பதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கர்நாடகா தேர்தலில் பாஜக 104 இடங்களில்தான் வென்றுள்ளது, பெரும்பான்மைக்கு தேவை 112 எம்.எல்.ஏக்கள். அதேநேரத்தில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி 115 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கிறது. அதனால் ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றன.
எந்த கட்சி ஆட்சி அமைப்பது என்பதை ஆளுநர் முடிவு செய்வார் என்பது மரபு. ஆனால் கோவாவிலும் மணிப்பூரிலும் அதிக இடங்களை வென்ற காங்கிரஸை அம்மாநில ஆளுநர்கள் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

பாஜக ஆட்சி
ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்களே இல்லாத பாஜகவைத்தான் அழைத்தார்கள் ஆளுநர்கள். மேகாலயாவில் 21 இடங்களில் காங்கிரஸ் வென்றது. ஆனால் 2 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக இதர கட்சிகளை இணணத்துக் கொண்டு ஆட்சி அமைத்தது.

இதுதான் காரணம்
இப்போது கர்நாடகாவிலும் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைப்போம் என்கிறது பாஜக. இந்த தெனாவெட்டு அரசியலுக்கு காரணமே எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகளில் தெளிவான தீர்ப்பு வழங்கப்படாமல் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

குதிரைபேரம்
காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கித்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும் என்பது பட்டவர்த்தனமான உண்மை. ஒருவேளை ஜேடிஎஸ் - காங்கிரஸ் அரசு அமைந்தால் சில எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பெரும்பான்மை கிடைக்காத வகையில் செய்வது என்பதும் பாஜகவின் திட்டம்.

அதிகபட்சம் தகுதி நீக்கம்
இப்படி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறோமே என்கிற கூச்ச நாச்சமே இல்லாத படுகொலையை செய்ய களமிறங்கியுள்ளது பாஜக. அப்படி சில எம்.எல்.ஏக்கள், பாஜகவிடம் விலை போனால் அதிகபட்சம் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் அல்லது கொறடா உத்தரவை மீறினார்கள் என்பதற்காக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

ஆகட்டும் பார்க்கலாம்
இதில் எது நடந்தாலும் நீதிமன்றத்தில் வழக்குகளைப் போட்டு காலத்தை கடத்திவிடலாம். ஏனெனில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்குகள் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகருக்கான அதிகாரம் போன்ற பல வழக்குகள் இன்னும் தீர்ப்பளிக்கப்படாமல் நீதிமன்றங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகளோடு இந்த வழக்கும் தூங்கும்..அதற்குள் நாம் நினைத்ததை சாதித்துவிடலாம் என்கிற தைரியத்தில்தான் பாஜக இப்படியான மரபற்ற, ஜனநாயக விரோத செயல்களில் இறங்குகிறது என்பதே அரசியல் பார்வையாளர்கள் குற்றச்சாட்டு.
-
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
திணறடிக்கும் பெங்களூர் டிராபிக்.. இளம்பெண் எடுத்த வினோத முடிவு.. இப்போ பிரச்சனை இல்லாமல் பறக்கறாரு -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
கதறும் பெங்களூர் PGகள்.. "ஒரு வாரம் தான் சமாளிக்க முடியும்!" சிலிண்டர் பற்றாக்குறையால் சாப்பாடு கட் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications