நீங்கள் அபாய கட்டத்தை நெருங்கி விட்டீர்கள்.. ஜாக்கிரதை.. பாஜகவிற்கு மமதா கடும் எச்சரிக்கை!
பாஜக கட்சி ஆட்சியில் இருக்கும் மிதப்பில் அபாய கட்டத்தை நெருங்கிவிட்டது, விரைவில் பெரிய பின்விளைவுகளை அக்கட்சி சந்திக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: பாஜக கட்சி ஆட்சியில் இருக்கும் மிதப்பில் அபாய கட்டத்தை நெருங்கிவிட்டது, விரைவில் பெரிய பின்விளைவுகளை அக்கட்சி சந்திக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு பின் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சார்பாக கொல்கத்தாவில் பெரிய பேரணி நடத்தப்பட்டு வருகிறது. பாஜகவை எதிர்த்து மிக கடுமையாக அவர் இந்த பேரணியில் பேசி வருகிறார்.
1993ல் மேற்கு வங்கதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த மமதா பானர்ஜி சார்பாக நடத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை போராட்டத்தில் அப்போதைய கம்யூனிஸ்ட் அரசால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வருடம் தோறும் ஜூலை 21 அன்று தியாகிகள் தினமாக அனுசரிக்கிறது. அதனால் இன்று அங்கு மமதா சார்பாக பேரணி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

என்ன சொன்னார்
இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியதாவது, இந்தியாவில் தவறான சட்டங்களை கொண்டு வர பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்திய நாட்டின் இறையாண்மையை பாஜக புல்டோசர் வைத்து தகர்க்கிறது. நாங்கள் பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்தி உள்ளோம், நாங்கள் மக்களுக்காக பல நலத்திட்டங்களை கொண்டு வைத்துள்ளோம். பாஜகவால் அப்படி ஒரு விஷயத்தை சொல்ல முடியுமா?

மின்னணு வாக்கு பதிவு எந்திரம்
மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களை தூக்கி எரிய வேண்டும். மீண்டும் பழைய படி வாக்கு சீட்டு முறையை கொண்டு வரவேண்டும். மாநில சட்டசபை தேர்தல், மக்களவை தேர்தல், மற்ற சிறுசிறு தேர்தல்கள் கூட இனி வாக்கு சீட்டு முறையில்தான் நடக்க வேண்டும்.

அங்கு இல்லை
உலகில் வளர்ந்த நாடுகளில் கூட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவதில்லை. நாங்கள் இந்த நாளை தியாகிகள் தினமாக கொண்டாடுகிறோம். இனி இந்த நாளை ''கருப்பு பணத்தை மீண்டும் கொண்டு வாருங்கள்'' என்ற தினமாகவும் கொண்டாடுவோம். பாஜகவை கண்டிக்கும் வகையில் இந்த தினத்தை கொண்டாடுவோம்.

பாஜக மோசம்
பாஜக எம்எல்ஏக்களை எல்லாம் காசு கொடுத்து வாங்க பார்க்கிறது. உங்களுக்கு வெட்கமாக இல்லையா. நீங்கள் காசு கொடுத்து வாங்கும் எம்எல்ஏக்கள் சில நாட்களில் உங்கள் கட்சியில் இருந்து விலகுவது தெரியுமா? நீங்கள் பணத்தை வைத்து எம்எல்ஏக்களை வாங்கலாம். மக்களை வாங்க முடியாது.

அபாயம்
நீங்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவீர்கள். வங்கத்தின் கலாச்சாரத்தில் கை வைக்க நினைக்க வேண்டாம். உங்களுக்கு நாங்கள் தகுந்த பாடம் புகட்டுவோம். நீங்கள் அபாய கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறீர்கள், ஜாக்கிரதை, என்று மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications