ஜனநாயகத்தை பாஜக படுகொலை செஞ்சிருச்சே.. அநியாயம்.. மஹூவா மொய்த்ராவுக்கு நீதி கிடைக்கும்: மமதா ஆவேசம்!
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா எம்பி பதவியை பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை என அக்கட்சித் தலைவர் மமதா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார் திரிணாமுல் காங்கிரஸின் மஹூவா மொய்த்ரா எம்பி என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக நன்னடத்தை குழு விசாரணை நடத்தி அறிக்கை லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மஹூவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் கொந்தளித்து போய் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கூறியதாவது: பாஜகவின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்தான் இது. ஜனநாயகத்தை அவர்கள் படுகொலை செய்துவிட்டனர். இது அநீதியானது. மஹூவா மொய்த்ரா இந்த யுத்தத்தில் வெல்வார். மக்கள் மஹூவா மொய்த்ராவுக்கு நீதி வழங்குவார்கள். அடுத்த தேர்தலில் பாஜக நிச்சயமாகத் தோற்கும்.
மஹூவா மொய்த்ராவின் பதவியை பறித்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. "இந்தியா" கூட்டணியுடன் இணைந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராடும். ஜனநாயகத்தில் இப்படியான நிகழ்வுகள் துரதிரஷ்டவசமானவை. பாஜகவின் இத்தகைய அணுகுமுறை பெரும் துயரத்தை தருகிறது. ஜனநாயகத்துக்கு எப்படி துரோகம் செய்யலாம் பாஜக? மஹூவா மொய்த்ரா தமது நிலைப்பாட்டை தமது நியாயத்தை தெரிவிக்க அனுமதிக்காதது ஏன்? அப்பட்டமாக அநீதி இழைத்துவிட்டார்கள். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்க பாஜக தலைவரும் லோக்சபா எம்பியுமான சுகந்த மஜூம்தார் கூறியதாவது: இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியும் கூட 10 எம்.பிக்களை ஒரே நாளில் சஸ்பென்ட் செய்திருக்கிறதே. இப்படி நடப்பது ஒன்னும் முதல் முறையும் அல்ல. ஆனால் மேற்கு வங்கத்தில் இப்படி நிகழ்வது இதுதான் முறை. நன்னடத்தை குழுவின் முன்பாக மஹூவா மொய்த்ரா அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவர் தரப்பு வாதத்தையும் மஹூவா மொய்த்ரா முன்வைத்தார். கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மஹூவா மொய்த்ரா தப்பி ஓடக் கூடாது. இவ்வாறு சுகந்த மஜூம்தார் கூறினார்.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications