
நீ முஸ்லீமா?.. உன் பேரு முகமதுதானே?.. ஆதாரை எடு.. 65 வயது முதியவரை அடித்தே கொன்ற பாஜக தலைவர்
போபால்: நீ முஸ்லீமா என கேட்டு மனநிலம் பாதிக்கப்பட்டிருந்த 65வயது முதியவரை மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் தினேஷ் குஷ்வாஹா அடித்தே கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமியர்கள், தலித் சமூகத்தினர் உள்ளிட்டோர் மீது பாஜக மற்றும் இந்துத்துவா கும்பலின் அடக்குமுறைகள் தற்போது காண்போரையெல்லாம் இஸ்லாமியர்கள் என எண்ணி உயிர் போகும் அளவுக்கு தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த 65 வயது பவர்லால் ஜெயின் என்ற முதியவரிடம் பாஜக சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா பேச்சு கொடுத்தார்.
ம.பி.யில் முஸ்லிம் என்று நினைத்து இந்து முதியவர் கொலை! பாஜக மீது பாயும் ஜவாஹிருல்லா!

நீ முஸ்லீமா
அப்போது அவரிடம் நீ இஸ்லாமியரா, உன் பெயர் முகமதுதானே , உன் ஆதாரை காட்டு என அந்த முதியவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த முதியவர் மனம் நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் எந்த பதிலையும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் அந்த முதியவரிடம் மீண்டும் கேட்டுள்ளார்.
|
பதில் சொல்லவில்லை
அப்போது அந்த முதியவர் எந்த பதிலையும் சொல்லாததால் ஆத்திரமடைந்த தினேஷ் அந்த முதியவரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நீமுச் மாவட்டத்தில் கடந்த மே 17 முதல் 18 தேதி நடந்திருக்கலாம். உயிரிழந்த முதியவரின் உடல் மே 19 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

பவாரிலால் ஜெயின்
விசாரணையில் அவரது பெயர் பவாரிலால் ஜெயின் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து தினேஷ் குஷ்வாஹா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

பாஜக தலைவர்
பாஜக தலைவராக அடித்துக் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் பவாரிலால் ஜெயின் ரட்லம் மாவட்டத்தை சேர்ந்தவர். அண்மையில் குடும்பத்தோடு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது ஜெயின் காணாமல் போய்விட்டாராம். இவர் மானஸா காவல் எல்லைக்குள்பட்ட சிஸ்ரா கிராமத்தில் எப்படி வந்தார் என்பது தெரியவில்லை.
|
வைரலாகும் வீடியோ
பவாரிலால் ஜெயினின் சகோதரர் ராகேஷ் ஜெயின் மானஸா போலீஸாரிடம் புகார் அளித்து அவரை தேடி வந்த நிலையில் பவாரிலால் சடலமாக மீட்கப்பட்டார். பாஜக தலைவர் தாக்குதலால் பவாரிலால் கொல்லப்பட்ட சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு கண்டனங்கள் எழுகின்றன.