ரோகித் தற்கொலை: பொறுப்புணர்வுடன் செயல்படுங்க.. விளைவு மோசமாகிடும்...சொந்த கட்சியை சாடும் பாஜக தலைவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலித் மாணவர் ரோகித் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் செயல்படாமல் போனால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று பா.ஜ.க.வுக்கு மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் பஸ்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் பஸ்வான் தமது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க. மேலிடத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

paswan

அதில், ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் ரோகித் வெமுலா தற்கொலை விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் கவனம் செலுத்தாவிட்டால் மக்களின் கோபத்தையும், பழிதீர்க்கும் நடவடிக்கைகளையும், எதிர்ப்பையும், எதிர்வினைகளையும் எதிர்கொள்ள தயாராக வேண்டியிருக்கும் என அதில் எச்சரித்துள்ளார்.

ரோகித் விவகாரம் பா.ஜ.க.விலேயே கலகக் குரலாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+