தாடகா, சூரசா.. தீதியை அரக்கியாக புனை பெயர்களை வைத்து சித்தரிக்கும் பாஜக
கொல்கத்தா: மத்திய அரசை எதிர்க்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு புராணகாலத்தில் வந்த அரக்கர்களுடன் ஒப்பிட்டு பாஜகவினர் பட்டப் பெயரை வழங்கி வருகின்றனர்.
சாரதா நிதி நிறுவனம் மற்றும் தி ரோஸ்வேலி ஊழல் தொடர்பாக கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ போலீஸார் நேற்று இரவு அவரது வீட்டுக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கைது செய்தது.

இதுகுறித்து தகவலறிந்த மம்தா பானர்ஜி சம்பவ இடத்துக்கு வந்தார். மாநில அரசிடம் அனுமதி பெறாமல் காவல் துறை ஆணையரிடம் விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா நேற்று முதல் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் இதுகுறித்து ஹரியானா அமைச்சர் அனில் விஜ் கூறுகையில் சிறு வயதில் நாம் ராமாயணம் பார்த்திருப்போம். அதில் முனிவர்கள் யாகம் நடத்த முற்படுவர். ஆனால் அந்த யாகத்தை நடத்த விடாமல் அரக்கி தாடகா அங்கு வந்து அனைத்தையும் நாசம் செய்வார். இதுபோன்ற முக்கிய கதாபாத்திரத்தைதான் மம்தா செய்து வருகிறார்.
அது போல் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் விமானங்கள் தரையிறங்க விடாமல் தடை செய்த விதத்திலும் மம்தா தாடகா போன்றே செயல்பட்டார் என்றார்.
இது போல் மற்றொரு பாஜக தலைவர் சுரேந்திர சிங் கூறுகையில் ராமாயணத்தில் இலங்கைக்கு வரும் அனுமனை சுரசா தடுத்து நிறுத்துவார். அதுபோல் யோகி ஆதித்யநாத்தின் விமானத்தை மம்தா தடுத்து நிறுத்தியுள்ளார் என்றார். ஆனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரோ மம்தாவை ஜான்சி ராணி என கொண்டாடுகின்றனர்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
48 மணி நேரத்தில்.. மம்தாவுக்கு ஏற்பட்ட 5 அதிர்ச்சி.. திரும்பிய பக்கமெல்லாம் சிக்கல் மேல் சிக்கல்! -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications