நேற்று அடி, உதை: இன்று தங்கை.. தலையில் கை வைத்து பெண் நிர்வாகியிடம் மன்னிப்பு கோரிய பாஜக எம்எல்ஏ!
நரோடா: தேசிய வாத பெண் நிர்வாகியை தாக்கிய பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானி அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். தாக்கப்பட்ட நீது தேஜ்வானி என் தங்கையை போன்றவர் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் நரோடா பகுதியைச் சேர்ந்தவர் நீது தேஜ்வாணி. இவர் அத்தொகுதியில் உள்ள ஒரு தண்ணீர் பிரச்சனைக்காக தீர்வு கேட்க பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானியின் அலுவலகத்திற்கு நேற்று சென்றர்.
அப்போது நீது என்ன சொல்கிறார் என்பதைக்கூட கேட்காமல் பல்ராம் தவானி அவரை அடித்து கன்னத்தில் அறைந்து கீழே தள்ளினார். மேலும் அவரை சரமாரியாக உதைத்தார்.

வைரலான வீடியோ
இதனை தடுக்க சென்ற நீதுவின் கணவரையும் அங்கிருந்த பாஜகவினர் சரமாரியாக தாக்கினர். பாஜக எம்எல்ஏ பெண் ஒருவரை தாக்கும் காட்சிகள் வைரலானது.

மன்னிப்பு கேட்ட எம்எல்ஏ
இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியது. இதைத்தொடர்ந்து பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானி தான் தாக்கிய தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியான நீது தேஜ்வானியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

நேற்று நடந்த சம்பவம்
இன்று நீதுவுடன் சேர்ந்து பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நேற்று நடந்த சம்பவத்திற்காக நீது தேஜ்வானியிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எனது சகோதரி பேன்றவர்
நீது தேஜ்வானி எனது சகோதரி போன்றவர். எங்களுக்குள் இருந்த தவறான புரிதல் தற்போது சரியாகிவிட்டது. நீது தேஜ்வானிக்கு எப்போது என்ன உதவி வேண்டுமானாலும் செய்வேன் என உறுதியளித்திருக்கிறேன் என பல்ராம் தேஜ்வானி கூறினார்.
|
ராக்கி கட்டியி நீது தேஜ்வானி
பேசும் போது நீது தேஜ்வானி தலையில் கை வைத்து அவர் மன்னிப்பு கேட்டார். இதேபோல் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியான நீதுவும் பல்ராம் தவானி கையில் ராக்கியை கட்டி தனது சகோதரராக ஏற்றுக்கொண்டார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications