சட்டசபைக்குள் அமர்ந்து செல்போனில் பிரியங்கா காந்தி போட்டோவை ஆபாச கோணத்தில் பார்த்த பாஜக எம்.எல்.ஏ!
பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியிலுள்ள சட்டசபை கட்டிடத்தில் நடந்து வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் மட்டும் பெங்களூரு தவிர்த்து பெலகாவியில் நடைபெறுவது வழக்கம் என்பதால் அங்கு பேரவை கூட்டத்தொடர் நேற்றுமுன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.
கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று காலை அவைக்கு வந்த பீதர் மாவட்டம், அவுராத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ பிரபு சவான், தனது தலைமீது ஒரு கூடையை கொண்டுவந்தார். அதில் ரேசன் கார்டுகளை வைத்து விற்பனை செய்வது போல கூவிக் கூவி நடித்து காண்பித்தார். கர்நாடகாவில் நடைபெற்றுவரும் போலி ரேசன் கார்டு மோசடியை, சபையின் கவனத்திற்கு கொண்டுவர இதுபோல செய்ததாக அவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதனால் தொகுதி மக்களும் தங்கள் எம்.எல்.ஏவின் 'கிரியேட்டிவிட்டியை' நினைத்து புழகாங்கிதம் அடைந்திருந்தனர். ஆனால் மதியமே நிலைமை தலைகீழானது. ஏனெனில் மாலையில் பேரவை நடந்து கொண்டிருந்தபோது தனது இருக்கையில் இருந்தபடி எதையும் சட்டை செய்யாமல் செல்போனில் எதைஎதையோ நோண்டியபடி இருந்தார் பிரபு. அப்போது கேலரியில் இருந்த படங்களையும் அவர் பார்த்தார்.
அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தியின் படமும் இருந்தது. பிரியங்கா காந்தி, பேண்ட், சட்டை போட்டிருந்த படம் அவரது செல்போனில் இருந்தது. அந்த படத்தை ஜூம் செய்த எம்.எல்.ஏ சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஜூம் செய்தது முகத்தை அல்ல. ஆபாசமான கோணத்தில் கழுத்தின்கீழே அவர் ஜூம் செய்து வைத்திருந்தார்.
சபையின் மாடத்தில் இருந்து அவை நடவடிக்கைகளை வீடியோவில் பதிவு செய்த கன்னட செய்தி சேனல் வீடியோகிராபர்கள் இதை படம் பிடித்து ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். இதனால் பாஜகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக பிரபு சவானை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சபாநாயகருக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.
இதனிடையே ஹாவேரி மாவட்டம், ஹிரேகெரூர் தொகுதி எம்.எல்.ஏவான (பாஜக) யூ.பி.பனக்கார் சட்டசபையில் இன்று தனது செல்போனில் 'கேண்டிகிரஸ்' கேம் ஆடிக் கொண்டிருந்ததையும் கன்னட சேனல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
எடியூப்பா தலைமையிலான கடந்த பாஜக ஆட்சி காலத்தில் சட்டசபையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சிலர் ஆபாச வீடியோக்களை செல்போனில் பார்த்த செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்!












Click it and Unblock the Notifications