அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த மமதா...பாஜக எம்பி செளமித்ரா கான் மனைவி திரிணாமுல் காங்.-ல் ஐக்கியம்
கொல்கத்தா: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி எம்.பி. செளமித்ரா கான் மனைவி சுஜாதா மோண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே அங்கு சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்கிறது.

கடந்த 2 நாட்களாக மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது 6 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள், 2 காங். எம்.எல்.ஏக்கள், 1 மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதற்கு பதிலடியாக தற்போது பாஜகா எம்பி செளமித்ரா கான் மனைவி சுஜாதா மோண்டல் கான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுஜாதா மோண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகி உள்ளார்.












Click it and Unblock the Notifications