உத்தரகாண்ட் கோவிலில் கோஷ்டி மோதல்.. பாஜக எம்.பி. தருண் விஜய் படுகாயம்
டேராடூன்: உத்தரகாண்ட் அருகே கோவிலில் நடைபெற்ற கோஷ்டி மோதலில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் முசோரி என்ற இடத்தின் அருகே சில்கூர் தேவ்தா என்ற கோவில் உள்ளது. சுவாமி தரிசனம் செய்வதற்காக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செல்ல முயன்றனர்.

அப்போது, தருண் விஜய் கோவிலுக்குள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் மக்கள், அவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஏற்பட்ட கைலகலப்பில் தருண் விஜய் படுகாயம் அடைந்தார்.
இந்த மோதலில் அவரது கார் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டது. உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனினும் கோவிலுக்கு வெளியே எதனால் மோதல் ஏற்பட்டது என்பதற்கான காரணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. சில்கூர் தேவ்தா கோவிலுக்குள் தலித்துகள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உத்தரகாண்டில் இருந்து நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் தருண் விஜய் ஆவார்.
BJP MP Tarun Vijay received head injuries after a scuffle outside Silgur Devta Temple in Uttarakhand pic.twitter.com/dfveTshOcw
— ANI (@ANI_news) May 20, 2016
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications