முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்சிபி சிங் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகல் - என்ன நடந்தது?
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர்சிபி சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளனர். இருவரும் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூலை 7ஆம் தேதி நிறைவடைந்தது.
மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கும் மத்திய அமைச்சர்கள் இருவர் எம்.பி பதவிக்காலம் நிறைவடையும்போது மீண்டும் அது தொடர வாய்ப்பளிக்கப்படாமல் பதவி விலகுவது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்தார் அப்பாஸ் நக்விக்கும் ஆர்சிபி சிங்குக்கும் பிரதமர் மோதி பாராட்டு தெரிவித்தார்.

வழக்கமாக, மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒருவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்தால் அவரை பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்தில் இருந்தோ வேறு மாநிலத்தில் இருந்தோ உறுப்பினராக தேர்வு செய்ய பாரதிய ஜனதா கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும்.
நாடாளுமன்ற விதிகளின்படி, எம்.பி பதவிக்காலம் முடிந்து விட்டாலோ தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக அமைச்சராகவோ ஒருவர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டால் அவர் பதவியேற்ற நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் மக்களவையில் இருந்தோ மாநிலங்களவையில் இருந்தோ உறுப்பினராக தேர்வாகலாம்.
ஆனால், இம்முறை முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி. சிங்கின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதை அறிந்தும் அவர்கள் மீண்டும் எம்பி ஆக வாய்ப்பு தரப்படுமா என்பதை பாஜக மேலிடம் தெளிவுபடுத்தவில்லை.
முன்னதாக, புதின்கிழமை நண்பகலில் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக நக்வியும் ஆர்சிபி சிங்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்துப் பேசினார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications