முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருக்க பாஜக தான் காரணம்.. ஒவ்வொரு வீட்டிலும் தாமரை மலரும்! சொல்கிறார் தாவ்டே

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர் : பாகிஸ்தானை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், குறிப்பாக பாஜக ஆட்சியில் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, காஷ்மீர் பிரிவின் பாஜக தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.

மேலும் மத்திய காஷ்மீரில் உள்ள கந்தர்பால் என்ற இடத்தில் கட்சித் தொண்டர்களிடமும் வினோத் தாவ்டே பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

அப்போது பேசிய அவர், "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வசிக்கும் 125 கோடி மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு உழைத்து வருவதாகவும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், வடகிழக்கு முதல் குஜராத் வரையிலான அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியாக வளர்ச்சியடைந்து மக்களுக்கு சமமான வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.

மக்களுக்காக உழைப்பு

மக்களுக்காக உழைப்பு

அடிப்படையில் பாஜகவின் தீவிர செயல்பட்டாளரான பிரதமர் நரேந்திர சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல், சாதாரண மக்களுக்காக ஆண்டு முழுவதும் உழைக்கிறார் எனவும், தீபாவளியை கொண்டாடிவிட்டு, வெள்ளத்தின் போது காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சென்ற ஒரே பிரதமர் பிரதமர் மோடிதான்" என்றார். 60 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு இந்தியாவை அழித்துவிட்டது என்று காங்கிரஸைப் பற்றி கடுமையாக விமர்சித்தார்.

முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு

முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு


பாஜக மட்டுமே மக்களை ஒன்றாக வைத்திருக்க முடிந்த ஒரே கட்சி என்ற அவர், பாகிஸ்தானை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், குறிப்பாக பாஜக ஆட்சியில் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக கூறிய அவர், இந்தியாவை விட முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ள நாடுகளை காட்ட முடியுமா என்றார்.

ஒவ்வொரு வீட்டிலும் தாமரை

ஒவ்வொரு வீட்டிலும் தாமரை

முந்தைய ஆட்சியில் அவர், ஒரு காலத்தில் காஷ்மீர் பெரிய அளவிலான ஊழல், அராஜகம், நில பேரங்கள், வேலை வழங்குவதில் முறைகேடுகள் போன்றவற்றுக்கு பெயர் பெற்றது என தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தாமரை மலரும் காலம் வெகு தொலைவில் இல்லை, மக்கள் நம்பியிருக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+