பாஜக செயற்குழு கூட்டம் இன்று முதல் 2 நாட்களுக்கு... பேச்சாளர்கள் லிஸ்டில் “அத்வானி”க்கு நோ இடம்
பெங்களூரு: பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்க உள்ளது. இதையொட்டி நேற்று உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் அங்கு நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா உள்பட மொத்தம் 330 பாஜக தேசிய தலைவர்கள் கலந்து கொள்ளும் தேசிய செயற்குழு கூட்டம் இன்று முதல் பெங்களூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் தேசிய அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதபடுகிறது. இதற்கான காரணம் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்த பிறகு, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின் முதன் முறையாக தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதே போல் பாஜக தேசிய தலைவராக அமித்ஷா பதவியேற்ற பின் முதன் முறையாக கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செயற்குழு கூட்டத்தில் மாநிலத்தில் பாஜகவை எப்படி வெற்றி பெறச் செய்வது என்றும், அது மட்டுமில்லாமல் அஸ்ஸாம், தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சி குறித்தும் பேச உள்ளனர்.
மேலும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு ஒரு வருடத்தில் முக்கியமான நலத்திட்டங்கள் செயல்படுத்தினார்கள். இந்த திட்டங்கள் மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்த சாதனைகளை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றி இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பாஜக பொதுச் செயலாளரும், கர்நாடக பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தெரிவித்தார்.
பெங்களூரில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுவது இது 5 ஆவது முறையாகும். இந்த செயற்குழுவில் முக்கிய தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த செயற்குழு கூட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதமர் மோடி பேசவிருக்கும் பொதுக்கூட்ட இடமான பசவனகுடியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் செயற்குழு கூட்டத்தில் பேசும் தலைவர்கள் பட்டியலில் அத்வானி பெயர் இல்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications