சறுக்குதே தாமரை.. எங்க கட்சிக்கு 500 ஓட்டு கூட விழாது! சிக்கிம் பாஜக எம்எல்ஏ பகீர் - வெடித்த பூசல்
கேங்டாங்: தனித்து போட்டியிட்டால் பாஜகவுக்கு 500 வாக்குகள் கூட விழாது என அக்கட்சியின் எம்.எல்.ஏ.வே கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பாஜக இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டால் 500 வாக்குகள் கூட வாங்காது." இதை சொன்னது காங்கிரஸ் கட்சியினரோ அல்லது வேறு எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகளோ அல்ல. சிக்கிம் மாநில பாஜக எம்.எல்.ஏ ஒய்.டி.லெப்சா உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. குட்டி மாநிலமாக சிக்கிமின் அரசியலில் பாஜக எம்.எல்.ஏ. தெரிவித்த இந்த கருத்து குபு குபுவென புகைச்சலை கிளப்பி உள்ளது.

தோற்றாலும் வெற்றிகரமான தோல்வி என்று கட்சியை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் பாஜக நிர்வாகிகளுக்கு மத்தியில் எதிர்க்கட்சியினரைபோல் பாஜக எம்எல்ஏ பேசியதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா ஆட்சி செய்து வரும் சிக்கிம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில்தான் கேங்டாக் எம்.எல்.ஏ. லெப்சா இந்த கருத்தை கூறியுள்ளார். சிக்கிம் மாநில பாஜகவிற்கு நிலவி வரும் கோஷ்டிப் பூசலில் வெளிப்பாடாகவே அவர் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார். 2019 சட்டமன்றத் தேர்தலில் ஒரு சிக்கிமில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. அதன் பின் நடந்த 2 தொகுதி இடைத்தேர்தலில் எஸ்கேம் ஆதரவுடன் பாஜக வென்றது.
தற்போது பாஜக ஆளும் எஸ்கேஎம் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. இந்த நிலையில் எஸ்கேஎம் கட்சியுடன் கூட்டணியை தொடர விருப்பமில்லை என பாஜக மாநில தலைமை தெரிவித்து இருக்கிறது. இதனால் அக்கட்சிக்கு உள்ளேயே பூசல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக எஸ்கேஎம் கட்சியின் தயவால் சட்டமன்ற உறுப்பினராக லெப்சா, மாநில பாஜக தலைமையில் கருத்தை கடுமையாக எதிர்த்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எஸ்கேஎம் கட்சியுடன் கூட்டணி அமைக்காவிட்டால் சிக்கிம் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு. பாஜக தனியாக நின்று இங்கு பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றிபெற்றது கிடையாது. எஸ்கேஎம் ஆதரவால் கேங்க்டாக்கில் நானும், ரும்டெக் தொகுதியிலும் எஸ்டி வெஞ்சுங்பாவும் வெற்றிபெற்றோம்.
2024 வரை எஸ்கேஎம் கட்சியுடன் பாஜகவின் கூட்டணி தொடர வேண்டும் என நான் விரும்புகிறேன். இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் நிச்சயம் வெற்றிபெறுவோம்." என்று தெரிவித்து உள்ளார். மாநில பாஜக தலைமையின் கருத்துக்கு மாற்றாக எம்.எல்.ஏ தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் லெப்சா சொன்னது அவரது சொந்த கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் கமல் அதிகாரி கூறியுள்ளார். சிக்கிமில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். 2 கட்சிகளுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை." என்று கூறியுள்ளார். சிக்கிமில் முன்பு பாஜகவுக்கு 12 எம்.எல்.ஏக்கள் இருந்துள்ளார்கள். ஆனால், 2019 தேர்தலில் இவர்களில் 10 பேர் எஸ்டிஎப் கட்சி வேட்பாளர்களால் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications