அன்புமணிக்கு உடனே 'லட்டு' கிடைக்காது...?
டெல்லி: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு இப்போதைக்கு அமைச்சர் பதவி தர பாஜக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி இப்போதைக்குத் தரப்பட மாட்டாது என்றும் தெரிகிறது.
வரலாறு காணாத வெற்றியுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக. வாஜ்பாயால் கூட முடியாததை மோடி அலை சாதித்துள்ளது. 282 இடங்களுடன் தனிப் பெரும்பான்மையுடன் மோடி அரசமைக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தமாக 335 இடங்கள் கிடைத்துள்ளன.

மே 20ம் தேதி பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார் மோடி. அதன் பின்னர் அவரது தலைமையில் மத்திய அரசு அமைகிறது. புதிய அமைச்சரவையில் யார் யார் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சர் பதவியை பாஜக தரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதால் இப்போதைக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தர பாஜக ஆர்வம் காட்டவில்லையாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் உள்ளதாம்.
எனவே மோடி பிரதமராகப் பதவியேற்கும்போது, கூடவே பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. இவர்களில், தமிழகத்திலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒருவரான பொன் ராதாகிருஷ்ணனும் இடம் பெறக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தமிழகத்திலிருந்து பாமக சார்பில் தேர்வாகியுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் அமைச்சர் பதவிக்கு சற்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிகிறது.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications