பாஜக-பிடிபி கூட்டணி முறிவிற்கு பின்னணியில் அஜித் தோவல் அட்வைஸ்? பின்னணி தகவல்கள்
Recommended Video

டெல்லி: பாஜக-பிடிபி கூட்டணி பிளவுக்கு பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறிய சில தகவல்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ரம்ஜானையொட்டி தாக்குதல் நிறுத்தத்தை இந்தியா அமல்படுத்தியது. இதன்படி பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கி சண்டையிடுவது மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், இந்த காலகட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலும், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலும் மற்ற நேரங்களைவிடவும் இரட்டிப்பாகியது.

பாக். ராணுவம் அத்துமீறல்
பாக்.ராணுவத்தினர் சுட்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து மறுநாளே 2 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
ரம்ஜானுக்கு முந்தைய நாள், காஷ்மீரில் பிரபல பத்திரிகையாளர் சுஜாத் புகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், போர் நிறுத்தத்தை தொடராமல் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு பிடிபி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பாஜக-பிடிபி நடுவேயான கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

அஜித் தோவல்-அமித்ஷா சந்திப்பு
இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்தார். ஜம்மு காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம், பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளின் திட்டங்கள் குறித்து அவரிடம் கேட்டறிந்தார். தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதே சிறந்தது என்று அஜித் தோவல் அப்போது அமித்ஷாவிடம் கூறியதாக தெரிகிறது.

அமைச்சர்களுடன் ஆலோசனை
இதையடுத்து, காஷ்மீர் அரசில் அங்கம் வகிக்கும் பாஜகவை சேர்ந்த அமைச்சர்களை டெல்லிக்கு அழைத்து இந்த முடிவு குறித்து அமித்ஷா விளக்கியுள்ளார். இதையடுத்து மெஹபூபா முப்தி அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற பாஜக முடிவு செய்து அறிவித்துள்ளது. இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தல்
இதனிடையே மெஹபூபா முப்தி அரசு கவிழ்ந்ததும், குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், 2019 லோக்சபா தேர்தலுக்கு காஷ்மீரில் பாஜகவை தயார் படுத்த இந்த காலகட்டம் உதவும் என பாஜக தலைமை நினைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications