"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக ஒரு விரிவான திட்டத்தைப் போட்டு இருக்கிறது. அங்கு திரிணாமுல் பலவீனமாக இருக்கும் மாநிலத்தின் வடக்கு பகுதியில் கால் பதிப்பதே பாஜகவின் திட்டமாக உள்ளது. பாஜக இந்த பிராந்தியத்தில் போட்டுள்ள திட்டம் என்ன.. இது மம்தாவுக்கு எந்தளவுக்குத் தலைவலியை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
மேற்கு வங்கத்தில் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக முனைப்பாக இருக்கிறது. இதற்காக விரிவான திட்டத்தைப் போட்டு கச்சிதமாகக் காய்களை நகர்த்தி வருகிறது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுலுக்கு எதிராக உள்ள மக்கள் மனநிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

வடக்கு பகுதி
குறிப்பாக பாஜக அங்கு மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. அங்குத் தனது இருப்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. 54 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தின் வடக்கு பகுதி, ஆட்சிக்கு வருவது யார் என்பதைத் தீர்மானிக்கக் கூடும்.. நீண்ட காலமாக பாஜகவுக்கு சவாலாகக் கருதப்பட்ட மாநிலத்தின் வடக்கு பகுதியில் இந்த முறை கால்பதிக்க முடியும் என பாஜக நம்புகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் இந்த பகுதிக்குத் துரோகம் செய்துவிட்டதாகச் சொல்லி பாஜக தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இப்பகுதியை திரிணாமுல் புறக்கணித்துவிட்டது என்பதையே பாஜக தனது பிரச்சாரத்தில் நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இதை மையமாக வைத்தே அங்கு வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
பாஜகவின் திட்டம்
சிலிகுரியின் உயர்மட்ட அமைப்புக் கூட்டத்தில், கள அளவிலான ஒருங்கிணைப்பு வியூகம் இறுதி செய்யப்பட்டது. மம்தா பானர்ஜி அரசு புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டி, பிராந்தியப் பிரச்சனைகளை பாஜக முன்வைக்கும். இதுவே இப்போது இருக்கும் திட்டம். வட வங்காளத்திற்கு மாநிலத்தின் மொத்த ஒதுக்கீட்டில் 0.002% மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், தென் வங்காளத்தை விட இது குறைவு என்றும் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
ரூ. 5,899 கோடி பேரிடர் நிவாரண நிதிகள் வெள்ளம், நிலச்சரிவு பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்றடையாததையும் பாஜக எழுப்பத் திட்டமிட்டுள்ளது.. பாக்டோகரா விமான நிலைய விரிவாக்கத் தடைகள், தேயிலைத் தொழிலாளர் பிரச்சினைகள், கடத்தல் மற்றும் அரசியல் வன்முறை போன்றவை அதன் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் பெறும். மேற்கு வங்க பாஜக பொறுப்பாளர் சுனில் பன்சல், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், கட்சி வேட்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்ற சிலிகுரி கூட்டத்தில் பாஜகவின் திட்டம் இறுதி செய்யப்பட்டது.
ரொம்பவே முக்கியம்
மேற்கு வங்கத்தின் வடக்கு பிராந்தியத்தில் மாறிவரும் அரசியல் சூழல், வரவிருக்கும் தேர்தல்களில் அதன் 54 இடங்களை மிக முக்கியமானதாக்குகிறது. இந்த பிராந்தியத்தில் உள்ள டார்ஜிலிங் மக்களவைத் தொகுதியில், 2009 முதல் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஜஸ்வந்த் சிங், எஸ்.எஸ். அலுவாலியா, அண்மைய இரு முறை ராஜு பிஸ்டா போன்றோர் இங்கு வெற்றி பெற்றுள்ளனர். இதை மையமாக வைத்து பாஜக இங்கு வளர முயல்கிறது.
மறுபுறம் திரிணாமுல் இந்த பிராந்தியத்தை மீட்கக் கடுமையாகப் போராடுகிறது. மாநிலத்தின் வடக்கு பகுதி வரலாற்று ரீதியாகக் காங்கிரஸ், இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. அதிக பழங்குடி, சிறுபான்மையினர் உள்ள இப்பகுதியில் திரிணாமுலின் இருப்பு பெரிதாக இல்லை. இப்போது காங்கிரஸ், இடதுசாரிகள் பலவீனமாக உள்ள சூழலில், அதை அறுவடை செய்ய பாஜக முயல்கிறது.
கணிக்க முடியாது
இந்த பிராந்தியத்தின் தேர்தல் முடிவுகள் இப்பகுதியின் கணிக்க முடியாத தன்மையைக் காட்டுகிறது. 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திரிணாமுல் 25 இடங்களை வென்றது. 2019 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்குச் சாதகமானது. அப்போது வட வங்காளத்தில் உள்ள எட்டுத் தொகுதிகளில் ஏழு தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. 2021 சட்டமன்றத் தேர்தல்களில், திரிணாமுல் சுமார் 24 தொகுதிகளிலும், பாஜக 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது நிலையை உறுதிப்படுத்தியது. 2024 மக்களவைத் தேர்தலில், பாஜக எட்டுத் தொகுதிகளில் ஆறு இடங்களில் வலுவான வெற்றியைப் பெற்றது. இப்படித் தேர்தல் முடிவுகளும் கூட மாறி மாறியே இருந்துள்ளது.
இந்தச் சூழலில் தான் வட வங்காளத்தில் உள்ள அனைத்து 54 சட்டமன்றத் தொகுதிகளிலும் தீவிரமாகப் போட்டியிட பாஜக தயாராகி வருகிறது. இதன் மூலம் இப்பகுதியில் தனது பலத்தை அதிகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
-
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications