எழுந்து நிற்கவே முடியலை.. இதில் 9 பிரதமர் வேட்பாளர்கள் வேறு.. அமித் ஷா செம நக்கல்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கு பெரும் பேராசை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் 9 பிரதமர் வேட்பாளர்களை கொண்டுள்ளனர் என அமித்ஷா கிண்டல் செய்தார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. கூட்டணி பேரங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மால்டாவில் பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். அவர் பேசுகையில் பாஜக கூட்டணி இருப்பது ஒரே ஒரு பிரதமர் வேட்பாளர், அது நரேந்திர மோடிதான். எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி என்பது பெரிதும் பேராசை பிடித்ததாகும்.

பதிலடி

பதிலடி

நாம் ஏழ்மையையும் ஊழலையும் ஒழிக்க விரும்புகிறோம். ஆனால் அவர்களோ நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப விரும்புகின்றனர். கையாலாத அரசு அமைந்தால்தான் அவர்களால் ஊழல் செய்ய முடியும். ஆனால் நாமோ பாகிஸ்தானுக்குதக்க பதிலடி கொடுக்க ஒரு வலிமையான அரசை விரும்புகிறோம்.

கையாலாத அரசு

கையாலாத அரசு

வலிமையான அரசா அல்லது கையாலாத அரசா என்பதை மக்களே முடிவு செய்துக் கொள்ளட்டும். மம்தா பானர்ஜிக்கு ஒரு விஷயம் தெரிய வேண்டும். அதாவது ஒரே மேடையில் 20 முதல் 25 தலைவர்களை கொண்டு வந்து நிறுத்தினாலும் ஆவதற்கு ஒன்றும் இல்லை.

100 கோடி மக்கள்

100 கோடி மக்கள்

ஏனென்றால் மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்து நரேந்திர மோடியை பிரதமராக்கவுள்ளனர். மோடியுடன் 100 கோடி மக்கள் துணைநிற்பர்.

யாத்திரை

யாத்திரை

மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இல்லை. 4 ரத யாத்திரைகளை நடத்த நாம் விரும்பினோம். ஆனால் மம்தாவுக்கு பயம் ஏற்பட்டு நமது யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார் என்றார் அமித்ஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+