டெல்லி: ஆட்சியமைக்க பாஜக மறுப்பு… ஆம் ஆத்மிக்கு அழைப்பு– ஆதரவு தரும் ராகுல்?
டெல்லி: டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை தங்களிடம் இல்லாததால், ஆட்சி அமைக்க இயலாது என்று துணை நிலை ஆளுநரிடம் பாஜக கூறிவிட்டது.
இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதிரடி திருப்பமாக ஆம் ஆத்மிக்கு ஆதரவு தரத்தயார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. அங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும்.

தொங்கு சட்டமன்றம்
இந்நிலையில், இப்போது நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 32 இடங்களும், ஆம் ஆத்மிகட்சிக்கு 28 இடங்களும், காங்கிரஸுக்கு 8 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சைக்கு தலா ஓர் இடமும் கிடைத்தன. பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால், தான் ஆட்சி அமைக்கப் போவதில்லை. வேண்டுமானால் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கட்டும் என்று பாஜக கூறிவிட்டது.

யாருக்கும் ஆதரவில்லை
பாஜக, காங்கிரஸ் ஆகிய எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்க முடியாது. அவர்களின் ஆதரவைப் பெற்று நாங்களும் ஆட்சி அமைக்க மாட்டோம். மறுதேர்தலை சந்திப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

ஆளுநருடன் சந்திப்பு
இந்நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்ஷ் வர்தனை துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க் அழைத்தார்.
அவரை வியாழக்கிழமை சந்தித்த ஹர்ஷ் வர்தன், தங்களால் ஆட்சி அமைக்க இயலாது என்று தெரிவித்துவிட்டார். இதையடுத்து அங்கு மறுதேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

எதிர்க்கட்சியாக விருப்பம்
இது தொடர்பாக ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த துணை நிலை ஆளுநர் எங்களை அழைத்தார். எங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை.
எனவே, ஆட்சி அமைக்க இயலாத நிலையில் உள்ளோம். எதிர்க்கட்சியாக செயல்பட விரும்புகிறோம் என அவரிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.

ஆம் ஆத்மிக்கு அழைப்பு
இதை அடுத்து, மரபுப் படி, உறுப்பினர் எண்ணிக்கையில் அடுத்த இடத்தில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைப்பது தொடர்பான செயல்திட்டம் குறித்து விவாதிக்க வருமாறு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால், வரும் சனிக்கிழமை துணை நிலை ஆளுநரை சந்திக்க வருவதாக பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ் அறிவிப்பு
இந்நிலையில், வெற்றி பெற்ற 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர். அப்போது, திடீர் திருப்பமாக, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்களிடம், அவர்களது வெற்றிக்கான காரணம் பற்றியும், கட்சியின் தோல்விக்கான காரணம் பற்றியும் ராகுல் காந்தி கேட்டார். இதுபற்றி அறிக்கை அளிக்குமாறு அவர் உத்தரவிட்டார். பின்னர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ஜெய் கிஷன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அந்த அரசை வெளியில் இருந்து ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ராகுல்காந்தி அறிவிப்பு
புதிய அரசு அமைக்க ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பது பற்றி ராகுல் காந்தியிடமும் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், ‘அது பரிசீலனையில் இருக்கிறது' என்று மட்டும் பதில் அளித்தார்.
இதன்மூலம், டெல்லியில், காங்கிரஸ் ஆதரவுடன், ஆம் ஆத்மி ஆட்சி அமைய வாய்ப்பு உருவாகி உள்ளது. ஆனால் காங்கிரசின் ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்த ஆம் ஆத்மி கட்சியினர், காங்கிரஸ் தயவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்வார்களா? என்பதே அரசியல்நோக்கர்களின் கேள்வியாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications