உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி.. பாஜக தேர்தல் அறிக்கை
டெல்லி: 12ம் வகுப்பு வரை மாணாக்கர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

இந்நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மக்கள் நல்வாழ்வுக்கான உறுதிமொழி என்ற பெயரில் கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா, மாநில தலைநகர் லக்னோவில் இன்று வெளியிட்டார்.
அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் 9 பிரிவாக தேர்தல் அறிக்கை பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் அறிக்கையில், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, பள்ளியில் சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணத்தில் சலுகை, மாநிலத்தின் கனிம வளத்தை கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க தனிப்படை, மூன்றாம் மற்றும் நான்காம் நிலை அரசு பணிகளுக்கான தேர்வில் நேர்முகத் தேர்வு ரத்து ஆகிய அதிரடி அறிவிப்புகள் உள்ளன.
50 விழுக்காடுக்கு மேல் மதிப்பெண் எடுத்தால் கல்லூரி படிப்பு முடியும்வரையும் இலவச கல்வி என்றும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித் ஷா, உத்தரப்பிரதேசத்தை தவிர, அருகேயுள்ள பீகார், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பெரிய மாநிலங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன. உத்தர பிரதேசம் மட்டும்தான் முன்னேறவில்லை. உத்தரப்பிரதேச வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடியை ஒதுக்கியது. ஆனால் மாநிலத்தில் எதுவும் நடக்க வில்லை என்று குற்றம் சாட்டினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications