சூத்திரர்கள், தலித்துகள், பெண்களுக்கு எதிரான மனுஸ்மிருதி ஆட்சியை நோக்கி பாஜக..சித்தராமையா எச்சரிக்கை
மைசூர்: நாட்டின் பெரும்பான்மையினராக இருக்கக் கூடிய சூத்திரர்கள், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான மனுஸ்மிருதியின் அடிப்படையிலான ஆட்சியை மீண்டும் நடைமுறைப்படுத்த பாஜக துடிக்கிறது என கர்நாடகா முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
மைசூரில் காங்கிரஸ் வேட்பாளர் லக்ஷமணனுக்கு ஆதரவாக தலித் செயற்பாட்டாளர்கள், தலைவர்களின் கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதாவது: மோடி நாட்டின் பிரதமராகிவிட்டால் இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என பேசியவர்தான் முன்னாள் பிரதமர் தேவ கவுடா. இப்போது அதே மோடியுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளுக்கு தெளிவான சித்தாந்த புரிதல் அவசியமானது.

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் சமூக நீதிக்கு எதிரானது. அதனால்தான் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. இடஒதுக்கீடு என்பது பிச்சை கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைதான் இடஒதுக்கீடு. இந்திய சமூகத்தில் ஜாதி இருக்கும் வரை இடஒதுக்கீடு என்பதும் இருந்தே தீரும்.
இந்தியாவின் விடுதலைக்கு முன்னர் சூத்திரர்களாகிய நாம் கல்வி உரிமையை பெற்றிருந்தோமா? பெண்களுக்கான உரிமைகள் கிடைத்தனவா? கணவர் இறந்த உடனே பெண்ணும் தீக்குளித்து உடன்கட்டை ஏறுகிற கொடுமைதானே நடந்து கொண்டிருந்தது? மனுஸ்மிருதி என்ற பெயரால் மனிதகுல விரோத பழக்க வழக்கங்கள்தானே பின்பற்றப்பட்டன. இவற்றை எல்லாம் நமது அரசியல் சாசனம் தடை செய்திருக்கிறது.
ஆனால் தற்போது அத்தகைய மனிதகுல விரோதமான மனுஸ்மிருதியின் சரத்துகளை அரசியல் சாசனத்தில் இணைக்க பாஜக முயற்சிக்கிறது. அந்த மனுஸ்மிருதியின் ஆட்சியை நோக்கி பாஜக சென்று கொண்டிருக்கிறது. இந்த சதியை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
கோவில் கருவறைக்குள் சூத்திரர்களும் பெண்களும் தலித்துகளும் இன்றும் அனுமதிக்கப்படுவதில்லையே. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உயர் பொறுப்புகளில் சூத்திரர்கள், தலித்துகள், பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நஞ்சே கவுடா உள்ளிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உயர் பொறுப்புகளுக்கும் நியமிக்கப்படுவதில்லை. சூத்திரர்களை பயன்படுத்திக் கொள்ள மட்டுமே செய்கின்றனர். ஆகையால்தான் சூத்திரர்களும் தலித்துகளும் பெண்களும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேரவே கூடாது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கை கோர்த்துவிட்டது. அதனால் அந்த கட்சியை விமர்சிக்காமலா இருக்க முடியும்? தலித் மக்கள் தொகைக்கு ஏற்ப மேம்பாட்டு நிதியை ஒதுக்கியது காங்கிரஸ் அரசுதான். இத்தகைய முற்போக்கான சட்டத்தை நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலாவது பாஜக அரசு அமல்படுத்தி இருக்கிறதா? ஒப்பந்தங்களில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததும் காங்கிரஸ்தான். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வகை செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை எதிர்த்ததும் பாஜகதானே? இவ்வாறு சித்தராமையா கூறினார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications