"எதிர்காலத்தில் காங்கிரஸில் நேரு குடும்பம் மட்டுமே எஞ்சியிருக்கும்".. கடுமையாக கலாய்த்த பாஜக
குவாஹாட்டி: காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக, "எதிர்காலத்தில் காங்கிரஸில் நேரு குடும்பத்தினர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்" என்று விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி., மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவருமான குலாம் நபி ஆசாத் இன்று அதிரடியாக கட்சியில் இருந்து விலகினார். தனது விலகல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் பல விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் குழந்தைத் தனமான நடவடிக்கையின் காரணமாகவே 2014 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு காங்கிரஸில் இருந்த ஆலோசனை முறைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறு தனது ராஜினாமா கடிதத்தில் ராகுல் காந்தி மீது பல குற்றச்சாட்டுகளை குலாம் நபி ஆசாத் சுமித்தியுள்ளார்.
இந்நிலையில், குலாம் நபி ஆசாத் விலகல் குறித்து அசாம் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த விஸ்வ சர்மாவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதன் காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். குலாம் நபி ஆசாத்தும் இதனை காரணமாக கூறியே விலகியுள்ளார். குலாம் நபி ஆசாத்தின் ராஜினாமா கடிதத்தையும், நான் 2015-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிய போது அளித்த ராஜினாமா கடிதத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதை காணலாம்.
ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்றவர் என்பது காங்கிரஸில் உள்ள எல்லோருக்கும் தெரியும். சோனியா காந்தி கட்சிக்கு தலைமை வகிக்க விரும்பவில்லை. தனது மகன் ராகுல் காந்தியை முன்னுக்கு கொண்டு வருவதிலேயே அவர் குறியாக இருக்கிறார். ஆனால் அது ஒரு பயனற்ற முயற்சி. காங்கிரஸுக்கு விசுவாசமானவர்கள் வரிசையாக கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இப்படியே சென்றால், காங்கிரஸில் நேரு குடும்பத்தினர் மட்டுமே இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications