யாருடன் கூட்டணி? 4 நாளில் முடிவு எடுப்போம்: பாஸ்வான் திடீர் பல்டி
டெல்லி: லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து 4 நாளில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி இடம்பெற்றிருந்தது. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் இணைந்து லோக் ஜனசக்தி தேர்தலை எதிர்கொள்ளும் எனக் கூறப்பட்டு வந்தது.
ஆனால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக பாஜக அணிக்கு போகிறது லோக்ஜனசக்தி என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் பொகாரோ எஃகு ஆலை ஆட்சேர்ப்பு முறைகேடு வழக்கில் பாஸ்வானிடம் சிபிஐ விசாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பாஜக கூட்டணியில் லோக்ஜனசக்தி இணைந்துள்ளதாகவும் பீகாரில் அந்த கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
அலட்சியமாக இருக்கும் காங்: பாஸ்வான்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:
லோக் ஜனசக்தியைப் பொறுத்தவரையில் காங்கிரஸுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளோம்.
இருப்பினும் காங்கிரஸ் மேலிடத்துக்கு உங்களது தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்க விரும்புகிறோம். இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தேதி ஒதுக்கிக் கொடுக்குமாறு கேட்டோம். ஆனால் பீகாரில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டவில்லை.
அதேபோல் உறுதியான எந்த ஒரு முடிவையும் ராஷ்டிரிய ஜனதா தளமும் எடுக்கவில்லை. காங்கிரஸ் என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்றும் தெரியவில்லை. இதனால் நாங்கள் அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போதைய சூழ்நிலையில் மூன்றாவது அணி என்பது தேவையில்லை. கூட்டணி தொடர்பான முறையான அறிவிப்பை இன்னும் 4 நாட்களில் வெளியிடுவோம். இவ்வாறு பாஸ்வான் கூறினார்.
பாஸ்வான் தாவுவதும் தடுமாறுவதும் ஏன்?
பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவற்றைத் தொடர்ந்து 4வதாகத்தான் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெல்லக் கூடியதுதான்.
பீகாரில் 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 2 தொகுதிகளில்தான் வென்றது. ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டு சேர்ந்திருந்தால் கூடுதலாக இரண்டு தொகுதிகள் கிடைத்திருக்கும். ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்திக்கு வாக்கு வங்கி இருந்தாலும் அது ஒரு தொகுதியில் மட்டும்தான் வெல்லக் கூடியது.
இதனால் பீகார் மாநில தேர்தல் தொகுதி உடன்பாட்டை காங்கிரஸ் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி கேட்கும் தொகுதிகளை ஒதுக்க ராஷ்டிரிய ஜனதா தளமும் மறுத்து வருகிறதாம்.
அதே நேரத்தில் பாரதிய ஜனதாவோ ராம்விலாஸ் பாஸ்வான் கேட்கும் 8 தொகுதிகளில் 7 தொகுதிகளைக் கொடுக்க முன்வந்துள்ளது. 'ஆரா' என்ற தொகுதியில் முன்னாள் உள்துறை செயலர் ஆர்.கே.சிங், பாஜக வேட்பாளராக போட்டியிடுவதால் அத்தொகுதியை மட்டும் விட்டுக் கொடுக்க இயலாது என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி பாஸ்வான் கட்சியினர் பாஜகவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில்தான் பாஜக- லோக்ஜனசக்தி கூட்டணி என்று செய்திகள் அடிபட்டது. இன்று கூட்டணியை அவர் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது.
இதனிடையே பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ராம்விலாஸ் பாஸ்வான் சந்தித்து கூட்டணியை உறுதி செய்த பின்னர்தான் முறையான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications