ம.பி. சஸ்பென்ஸ் ஓவர்.. முதல்வர் பதவியை துறந்த சிவராஜ்சிங் சவுகான்.. ஆட்சிக்கு உரிமை கோரப்போவதில்லை
Recommended Video

போபால்: மத்திய பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இரண்டாவது இடத்தைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. ஆரம்பம் முதலே, ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் நடுவே கடும் போட்டி நிலவி வந்தது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றனர்.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 30 மணி வரை தொடர்ந்தது.

காங்கிரஸ் தனிப்பெரும் கட்சி
இறுதியில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறுதிப் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு குறைந்தபட்சம் 116 எம்எல்ஏக்கள் பலம் தேவை. எனவே மத்திய பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை எழுந்துள்ளது.

ஆட்சி அமைக்க உரிமை
இருப்பினும் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவாகியுள்ளதால் ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள பாஜகவும் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

பாஜக திட்டம்
பகுஜன் சமாஜ் கட்சி இரு தொகுதிகளை வென்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியில் வென்றுள்ளது. 4 தொகுதிகளை சுயேச்சைகள் கைப்பற்றி உள்ளனர். இந்த 7 எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தால்தான் பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே குதிரை வேறு மூலமாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை கூட பாஜக இழுக்க வாய்ப்புள்ளது என்று கருதப்பட்டதால் தனது கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் மேலிடம் இறங்கியது.

பரபரப்பு
கோவா போன்ற மாநிலங்களில் காங்கிரஸை விட குறைந்த தொகுதிகளில் பாஜக வென்றிருந்தாலும், ஆளுநரின் துணையுடன் பாஜக ஆட்சியை பிடித்தது. அதுபோன்ற சூழ்நிலை மத்திய பிரதேசத்தில் வந்து விடாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைவர்கள் எடுக்க தொடங்கினர். ஆனால் ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேலிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதனால் மத்திய பிரதேச சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications