இதென்னய்யா புது வசனமாக இருக்கே..ஆடு கோழி திருட்டு மாதிரி ‘அரசாங்கத்தை’ திருடுன பாஜக- ராகுல் அட்டாக்!
போபால்: மத்திய பிரதேசத்தில் மக்கள் தேர்ந்தெடுத்த காங்கிரஸ் அரசாங்கத்தை பாஜக திருடிவிட்டது என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள்.

மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு, காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுக்கக் கூடும் என்கின்றன பெரும்பாலான கருத்து கணிப்புகள். மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜகவும் காங்கிரஸும் வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளன. அதேபோல இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
ம.பி.யில் இன்று தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் புயல் வீச உள்ளது. மத்தியப் பிரதேச மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 150 இடங்களைக் கொடுக்கப் போகிறார்கள்.
நீங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் மோடி-சிவ்ராஜ் சிங்-அமித்ஷா எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை திருடினார்கள்.
உங்கள் முடிவையும் உங்கள் இதயக் குரலையும் நசுக்க பாஜக தலைவர்கள் உழைத்துள்ளனர். பாஜக அரசு, மாநில விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் சிறு வியாபாரிகளை வஞ்சித்துள்ளது. காங்கிரஸால் இதைச் செய்ய முடியாது என்று பாஜக கூறியது, ஆனால் நாங்கள் கடந்த முறை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தோம்.
மோடி இரண்டு இந்தியாவை உருவாக்கி உள்ளார். மத்தியப் பிரதேசம் போன்ற ஏழை இந்தியாவில் 18,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இரண்டாவது இந்தியாவிலுள்ள கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் சொத்து வாங்குகிறார்கள். இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நமது இந்தியாவில் அனைவரும் மதிக்கப்பட வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கவனித்துப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications